ஜனாதிபதி மஹிந்த தோல்வியுற்றால் மிகுதி இரண்டு வருடத்தை பூர்த்தி செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்­தலில் தோல்­வி­யுற்றால் மிகுதி இரண்டு வரு­டத்தை பூர்த்தி செய்ய சட்­டத்தில் இட­மில்லை. அதற்­கான வாய்ப்­பு­க்களும் இல்லை. இருப்­பினும் தோல்வி நிச்­ச­யிக்­கப்­பட்­ட­மை­யினால் அர­சாங்கம் பொய் பிர­சா­ரங்­களை செய்து வரு­கி­றது என்று குற்றம் சுமத்­திய மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.வி.) மஹிந்த ராஜபக்ஷ தோல்­வி­யுற்றும் வீடு செல்ல வில்­லை­யென்றால் அவரை வீட்­டிற்கு அனுப்பும் வழியை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் அக்­கட்சி கோரி­யது.

பத்­த­ர­முல்லை,பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலைமை காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்ற ஊட­க­வியலாளர் மாநாட்டின் போதே அக்­கட்­சியின் பிர­தான செய­லாளர் ரில்வின் சில்வா இதனை தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்;

அரச உடை­மை­களை தேர்தல் பிர­சார பணி­க­ளுக்­காக பிர­யோ­கிப்­ப­திலும் தேர்தல் சட்ட விதி­மு­றை­களை மீறு­வதில் மஹிந்த ராஜபக் ஷ உலக சாதனை படைத்­துள்ளார்.

தேர்தல் அறி­விப்பு வெளி­யாக முன்பே தேர்தல் சட்ட விதி­மு­றை­களை ஆளும் கட்­சி­யினர் மீறி வரு­கின்­றனர். நாட­ளா­விய ரீதியில் அனைத்து பிர­தான வீதி­க­ளிலும் சிறிய விதி­க­ளிலும் மஹிந்த ராஜபக் ஷவின் பதா­தை­களும் கட்­அ­வுட்­களும் தொங்­க­வி­டப்­ப­டுள்­ளன.

எனினும் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் அதி­ரடி சட்ட நட­வ­டிக்­கையின் கார­ண­மாக குறித்த கட்­அ­வுட்­டுகள் அகற்­றப்­பட்­டுள்­ளது. ஆயினும் கொழும்பு நக­ரிற்கு வெளியே இது­வரை கட்­அ­வுட்கள் அகற்­றப்­ப­ட­வில்லை. அதி­வேக பாதை­க­ளிலும் அரச நிறு­வ­னத்­திலும் கட்­அ­வுட்­கசள் இன்னும் காணப்­ப­டு­கின்­றன. தேர்தல் சட்­டத்தை பாது­காக்கும் பொறுப்­பு­ணர்வு கொண்ட பொலி­ஸா­ரையும் மஹிந்த ராஜபக் ஷ தனது கைப்­பைக்குள் வைத்து கொண்­டுள்ளார்.

தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் தேர்தல் பிர­சாரம் முழு­மை­யாக தோல்வி கண்­டுள்­ளது. முன்னாள் சு.கவின் பொதுச் செய­லாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஜாதிக ஹெல உறு­மய உள்­ளிட்டோர் அர­சி­ய­லி­லி­ருந்து வெளி­யே­றி­ய­மை­யினால் மஹிந்த ராஜபக்ஷ பிர­சார பணிகள் முடங்கி போயுள்­ளன. மேலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அமைதி காப்­பது அர­சிற்கு பெரும் அச்­சு­றுத்­த­லாக காணப்­ப­டு­கி­றது.

இதே­வேளை சுவ­ரொட்டி ஒட்டும் பணி­க­ளுக்கு அரச ஊழி­யர்கள் உள்­வாக்­கப்­ப­டு­கின்­றனர். மேலும் இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ் வண்­டிகள் நாளுக்கு நாள் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­சார பணிக்­காக பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அத்­தோடு இலங்கை போக்­கு­வ­ரத்து சபை ஊழி­யர்­க­ளுக்கு தபால் மூல வாக்­க­ளிப்­பிற்­கான விண்­ணப்பம் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் முறை­யி­டு­வதில் பய­னில்லை

எனவே இது தொடர்பில் தேர்தல் ஆணை­யா­ள­ரி­டமோ பொலி­ஸா­ரி­டமோ முறை­யி­டு­வதில் எவ்­வித பய­னு­மில்லை. அவர்­க­ளுக்கு உரிய வகையில் செயற்­ப­டு­வ­தற்­கான அதி­காரம் இல்லை.

அத்­தோடு எதி­ர­ணி­யி­ன­ருக்கு சட்­டங்கள் வைக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. எதி­ர­ணி­யி­னரின் மேடைகள் தீயிட்டு கொளுத்­தப்­ப­டு­கின்­றன. இது­தொ­டர்பில் பொலிஸார் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

மிகுதி இரண்டு வருட பதவி வகிப்பு

தற்­போது மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வி நிச்­ச­யிப்­பட்­டு­விட்­டது. இதனை உணர்ந்து கொண்ட அர­சாங்கம் பொய் பிர­சாரம் செய்து வரு­கி­றது. மஹிந்த ராஜப க் ஷ தோல்­வி­யுற்ற போதிலும் அவ­ரது மிகுதி இரண்டு வரு­டத்­தினை பூர்த்தி செய்ய முடி­யு­மென அர­சாங்கம் கூறு­கி­றது. அது முற்­றிலும் பொய் பிர­சாரம் அர­சி­ய­ல­மைப்பின் மூன்­றா­வது திருத்த சட்­டத்­திற்கு அமை­வாக அதற்­கான வாய்ப்­புகள் இல்லை. இதற்­க­மைய மஹிந்த மஹிந்த ராஜப க் ஷ தோல்­வி­யுற்றால் மிகுதி இரண்டு வரு­டத்தை பூர்த்தி செய்ய இடமில்லை.

தோல்வியுற்றும் மஹிந்த ராஜபக்ஷ பதிவி விலக மறுத்தால் அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய முறையை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

அத்தோடு நாட்டில் கம்யூட்டர் ஜில்மாட் கதை அறிமுகப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷயாகும்.இந்த தேர்தலில் மஹிந்த ராஜப க் ஷ எந்த ஜில்மார்ட் மோசடி செய்தாலும் தோல்வி அடைவது நிச்சயம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply