கிழக்கு மாகாண சபைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும:முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண சபைக்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். இதனைப் பெற்றுக் கொள்வதற்கான காலத்தை நீடித்துக் கொண்டு செல்ல முடியாது. கிழக்கு மாகாணம் அதிகாரத்தைப் பெறும் போதுதான் ஏனைய மாகாணங்களும் தானாகவே அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் மஹாபொல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய ஒற்றுமையை கிழக்கின் ஊடே பெற்றுக் கொள்ளல் என்ற தொனிப் பொருளிலான ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள அதிகாரங்களை நாம் பெற்றே ஆக வேண்டும். நான் இன்று முதலமைச்சராக இருக்கிறேன். நாளை வேறொருவர் முதலமைச்சராக வரலாம் அவ்வாறு வருபவர் எனது காலத்தில் அதிகாரங்களைப் பெற நான் முயற்சிக்கவில்லை என்று என்னைக் குற்றம் சொல்லக் கூடாது.

இலங்கையில் ஆயுதப் போராட்டத்தின் அவசியம் 83 கலவரத்தின் பின்னரே உணரப்பட்டது.

இருப்பினும் இந்தப் போராட்டத்தால் உயிர் இழப்புகளும் சொத்துகளுக்குச் சேதங்களுமே ஏற்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply