ஈராக்கில் அமெரிக்கா குண்டு வீச்சில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பலி

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். எனவே, அவர்களை அழிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. ஈராக்கில் கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளின் போர் விமானங்கள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது குண்டு வீசுகின்றன. இத்தாக்குதல்களில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலர் பலியாகி உள்ளனர். இத்தகவலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பு அதிகாரி ரியர் அட்மிரல் ஜான் கிர்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈராக்கில் அமெரிக்கா மற்றும் ஈராக் குண்டு வீச்சில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் பலர் பலியாகி உள்ளனர் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும்.

மேலும், ஈராக் ராணுவம், குர்த் படை வீரர்கள் உதவியுடன் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் இருந்த பலநகரங்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply