பிரசாரத்திற்காக சல்மான்கானை அரசாங்கம் அழைத்துள்ளது : ஹரீன் பெர்னாண்டோ
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக இந்திய திரைப்பட நடிகர் சல்மான்கானை அரசாங்கம் அழைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ கோடிக்கணக்கான நிதியை பிரசார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் மாநாட் டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,பாரியளவு வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் அரச சேவையாளர்கள் 13 இலட்சம் பேர் காணப்படுவதுடன் 80இலட்சத்திற்கும் அதிகமானோர் தனியார் துறையில் காணப்படுகின்றனர்.
எவ்விதமான தொழில்வாய்ப்புக்களை யும் ஏற்படுத்தாது குறிப்பட்ட அரச சேவை வாய்ப்புக்களை பிரசாரப்படுத்தி வருகின்றனர். தற்போது வேலைவாய்ப்பு வழங்கு வதாக கட்டாயப்படுத்தி இளைஞர் யுவதிகளை பிரசார நடவடிக்கைகளுக்கு அழைத்து வருகின்றனர். குறிப்பாக அரசாங் கத்தால் உருவாக்கப்பட்டுள்ள நீலப்படை யில் இவ்வாறானவர்களே காணப்படுகின்றார்கள். அவர்களை பிரசாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள்.
வருடத்திற்கு 20ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றனர். இருப்பினும் இளைஞர் யுவதிகளுக்கு கல்விக்கேற்ற அரச வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதில் லை. அதேநேரம் கா.பொ.த.சாதாரண, உயர்தரத்துடன் கல்வியை இடைநிறுத்திக்கொள்பவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட் டுள்ளபோதும் தனியார் மனிதவள நிறுவனத்திடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட் டுள்ளது.
அவ்வாறிருக்க தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக இந்திய பொலிவூட் நடிகர் சல்மான்கானை அரசாங்கம் அழைத்துள்ளது. நாட்டிலுள்ள நடிகர், நடிகைகள் அரசாங்கத்தை எதிர்ப்பதால் இவ்வாறான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள். அதேநேரம் பல்லாயிரக்கணக்கான வாக்குறுதிகள் இம்முறையும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின் றன. கோடிக்கணக்கான நிதி பிரசாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணியும் ஏனைய இளைஞர் சமூகமும் ஒன்றிணைந்து நியாயமான தேர்தலுக்காக செயற்படவுள்ளோம். இளையோர் சமுதாயத்தாலேயே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மேலும் எதிர் கால இளையோர் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவும் வளமான எதிர்காலத்திற்காகவும் விசேட நிகழ்ச்சித் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply