அஸ்வரை பாராளுமன்றிலிருந்து வெளியேற்றியமை முஸ்லிம்களுக்கு செய்த பேரூதவியாகும் : அமீர் அலி

ஏ.எச்.எம். அஸ்வரை பாராளுமன்றிலிருந்து வெளியேற்றியமை முஸ்லிம் மக்களுக்கு செய்த பேரூதவியாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார். அண்மையில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இந்த வெற்றிடத்திற்கு அமீர் அலி அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அஸ்வரை வெளியேற்றக்கிடைத்தமை முஸ்லிம்களுக்கு செய்த நன்மையாகவே கருதப்பட வேண்டுமென அமீர் அலி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் போது ஆளும் கட்சியினரை பாதுகாக்க அஸ்வர் நடவடிக்கை எடுத்து வந்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவதாக நான்கு ஆண்டுகள் அரசாங்கம் தம்மை ஏமாற்றி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்க இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும், இறுதி நேரத்திலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதவரளிக்கத் தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக மன்னாரில் தாம் மட்டுமே பிரச்சார கூட்டங்களை ஓழங்கு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு தமது கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply