100 கோடி ரூபா கொடுத்தாலும் அரசாங்கத்துடன் இணைய மாட்டேன் : திகாம்பரம்

தான் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார். பரவிவரும் இந்த செய்தி குறித்து அத தெரண தமிழிணையத்திடம் கருத்து வெளியிட்ட அவர்,´மலையக மக்களே என் உயிர். அதனால் மலையக மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசாங்கத்தில் ஒருபோதும் இணைந்து கொள்ள மாட்டேன். 100 கோடி ரூபா பணத்தை கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டு வரச் சொன்னாலும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள மாட்டேன். மலையக மக்களின் தனிவீடு காணி உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். தோல்வி பயத்தில் சிலர் நான் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வதந்தியை பரப்புகின்றனர். ஆனால் நான் தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன்´ என்று பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply