குறைபோசாக்குடைய சிறுவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பிஸ்கட் வகைகளை புலிகள் பயன்படுத்துகிறார்கள் : ஐ.நா.குற்றச் சாட்டு
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சிறுவர்களுக்கான விநியோகிக்கப்பட்ட உணவு வகைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. குறைபோசாக்குடைய சிறுவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பிஸ்கட் வகைகளை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில் யுத்தத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து அதிபுரதச் சத்து கொண்ட பிஸ்கட்கள் மீட்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
எனினும், இந்தக் குற்றச் சாட்டு தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
விடுதலைப் புலி உறுப்பினரிடம் அதிபுரதச்சத்து பிஸ்கட் வகைகள் மீட்கப்பட்டமை குறித்து அரச ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply