இராக்கில் தற்கொலைத் தாக்குதல்: 38 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர். இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக சன்னி பிரிவினரைக் கொண்ட “ஷாஹ்வா’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாக்தாதில் உள்ள ஒரு ராணுவத் தளத்தில் அந்த அமைப்பினர் வெள்ளிக்கிழமை கூடியிருந்தனர். அப்போது ராணுவத்தினரின் தடுப்புகளை மீறி அங்கு புகுந்த ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 38 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply