யாழ் தேவியின் காங்கேசன் துறை வரையான பயணம்
எதிர்வரும் 2ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ் தேவி புகையிரத சேவை காங்கேசன்துறை வரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ் தேவி இன்றைய தினம் பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து இன்று புகையிரதம் காங்கேசன்துறையை சென்றடைந்தது.
இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்ததுடன், காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply