கேமரூனில் ராணுவ தாக்குதலில் 100 தீவிரவாதிகள் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரு குறிப்பிட்ட மத அரசை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போகோ ஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர்கள் நுழைந்து சுமார் 200 மாணவிகளை கடத்திச்சென்ற சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனிலும் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் நைஜீரியா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோபிள் பகுதியில் நேற்றுமுன்தினம் கேமரூன் நாட்டு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கேமரூன் நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே மோசோகோ பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply