பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகள் கூரைத் தகடுகள் அமைச்சர் ஆறுமுகனின் கோரிக்கை ஜனாதிபதியால் ஏற்பு
மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு கூரைத்தகடுகள் மற்றும் வீட்டு உபகரணங்களை உடனடியாக வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரச அதிபர்களுக்கு உத்தரவு பிறப் பித்துள்ளார். இதன் முதற்கட்டமாக ஊவா மாகாணத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் முந்நூறு குடும்பங்களுக்கு இன்று (30) கூரைத்தகடுகள் மற்றும் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு தினங்களில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கு கூரைத் தகடுகள் மற்றும் தற்காலிக வீட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
நுவரெலியாவில் (28) நடைபெற்ற இ.தொ.கா.வின் மாபெரும் கூட்டத்திற்கு இருபத்தெட்டாயிரத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்மானின் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
கொட்டும் மழையையும் பொருட் படுத்தாது மக்கள் வெள்ளம் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை குழுமியிருந்தது. இம்மக்கள் வெள்ளத் தினால் நுவரெலியா நகரமே ஸ்தம் பித்தது.
அக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே மலையகத்தின் தோட்டப்புறங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தனிவீடுகள் அமைப்பது தொடர்பாகவும் விரிவாக கூறினார்.
மண்சரிவினால் பாதிக்கப்பட் டிருக்கும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான கூரைத்தகடுகள் உபகரணங்களையும் வழங்கும் படி ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply