மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் எதுவும் கிடையாது: சம்பந்தன் திட்டவட்டமாக அறிவிப்பு
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ளல், காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், பொது வேட்பாளருக்கு பரிபூரண ஆதரவை வழங்குவதாக குறிப்பிட்டார்.கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான, நிரந்தரமான, நடைமுறை சாத்தியம் உடைய, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல்தீர்வு வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
நல்லாட்சியுடன் கூடிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தற்போதை தேவையாகும். நீதித்துறை, ஊடகத்துறை உட்பட அனைத்துத் துறைகளும் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படுவதில்லை.
ஊழல் நிறைந்த அரசாங்கமே தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் நடத்தப்படுகிறது. எனவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தோம்.
இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் உட்பட எமது கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே நாம் இந்தத் தீர்மானத்துக்கு வந்தோம்.
மைத்திரிபால சிறிசேனவுக்காக மேடைகளில் ஏறி பிரசாரம் செய்வது தொடர்பில் இந்தநேரம் வரை முடிவு எடுக்கப்படவில்லை. எனினும் அவரது வெற்றிக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கேள்வி: கரையோர மாவட்டம் குறித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகோள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
பதில்: சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். எனினும் இப்போதைக்கு நாம் ஜனாதிபதித் தேர்தல் குறித்தே கவனம் செலுத்துகிறோம்.
கேள்வி: மைத்திரிபாலவுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளாரே?
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply