மைத்திரியை ஆதரிக்கும் கூட்டமைப்பு ஏன் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை

எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரிப்­ப­தற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வான கார­ணங்­களை இதற்கு சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கு­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவே ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. தமிழ் வாக்­குக்­களை வெல்­லு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் கூட்­ட­மைப்பு ஏன் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­க­வில்லை என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ கேள்வி எழுப்­பினார்.

எந்­த­வித இணக்­கமு­மின்றி ஒப்­பந்­த மும் இன்றி எப்­படி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கூட்­ட­மைப்பு ஆத­ரவு அளிக்­கலாம். இதன் மூலம் உண்­மைநி­லை­யினை தெற்கு மக்க­ளுக்கும் கூறாது வடக்கு மக்­க­ளுக்கும் கூறாதநிலையே காணப்­ப­டுகின்றது. இவ்வா­றான அர­சியல் தலை­வர்கள் சிறந்த தலை­வர்­களா? தெற்கு மக்­க­ளையும்,வடக்கு மக்­க­ளையும் இவர்கள் ஏமாற்­று­கின்­றனர். மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்­தவர். கட்­சியின் செய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டவர். இவ­ரது கொள்­கையும் ஜனா­தி­ப­தியின் கொள்­கையும் ஒன்­றா­கவே இருந்­தது. இந்த நிலையில் ஜனா­தி­ப­திக்கு கூட்­ட­மைப்­பினர் சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யி­ருக்­கலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்­தமும் இல்லை. பேச்­சு­வார்­ததை நடத்­தவும் இல்லை என்று கூட்­ட­மைப்­பினர் கூறு­கின்­றனர். அப்­ப­டி­யானால் அவர் தேர்­தலில் வெற்­றி­பெற்றால் என்ன நடக்கும். அவர் வெற்றி பெற்ற பின்னர் பேசுவோம் என கூட்­ட­மைப்பு சிந்­தித்­தி­ருந்தால் ஏன் அந்த சந்­தர்ப்­பத்தை ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு வழங்­க­வில்லை. சிங்­கள, தமிழ் மக்­களை ஏமாற்றும் வகை­யி­லேயே கூட்­ட­மைப்பின் செயற்­பாடு அமைந்­துள்­ளது. இது குறித்தும் மக்கள் சிந்­திக்­க­வேண்டும் என்றும் பாது­காப்பு செய­லாளர் எடுத்­துக்­கூ­றினார்.

தேசிய தமிழ் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று பாது­காப்பு அமைச்சில் சந்­தித்து பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­ரை­யா­டினார். இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?

பதில்:- ஜனா­தி­பதி வெற்­றி­பெ­றுவார்.

கேள்வி:- வட­ப­கு­தியின் தற்­போ­தைய நிலை குறித்து திருப்­தி­ய­டை­கின்­றீர்­களா?

பதில்:- வடக்கில், இன்று மக்­க­ளுக்கு சுதந்­திரம் உள்­ளது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் யாழ். குடா­நாட்டில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­மாக இருந்­தது. தற்­போது அந்த நிலை இல்லை. பெரு­ம­ள­வான இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. பெரு­ம­ள­வான காணிகள் மீளவும் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கில், இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருப்­ப­தா­கவும், காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இவற்றை ஒரே இரவில் செய்து விட முடி­யாது.

இரா­ணு­வப்­பி­ர­சன்­ன­மா­னது நிரந்­தர சமா­தானம் ஏற்­படும் வரையில் வடக்கில் அவ­சி­ய­மா­ன­தாகும். முப்­பது வருட யுத்­தத்தின் பின்னர் ஒரே இரவில் சக­ல­வற்­றையும் அகற்­றி­விட முடி­யாது. மீண்டும் 1980 ஆம் ஆண்­டு­க­ளுக்கு நாம் செல்ல முடி­யாது. வடக்கில் சட்டம், ஒழுங்­கு­பொ­லி­ஸா­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் பேசும் பொலி­ஸாரை பொலிஸ் நிலை­யங்­களில் நிய­மித்து வரு­கின்றோம். இதற்­கென விசேட பயிற்­சிக்­கல்­லூ­ரி­களை ஆரம்­பித்து வரு­கின்றோம். இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் தமிழ் பேசு­வ­தற்கு பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.

வடக்கில் அபி­வி­ருத்­திகள் இடம் பெறு­கின்­றன. வீதிகள், புகை­யி­ரத வீதிகள், அமைக்­கப்­ப­டு­கின்­றன. மின்­சாரம், குடிநீர் வச­திகள், மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இறுதி யுத்­தத்தின் போது கைப்­பற்­றப்­பட்ட தங்க நகை­களை நாம் மீளவும் கைய­ளித்து வரு­கின்றோம். தங்க நகை­க­ளுக்­கு­ரி­ய­வர்­களின் விப­ரங்­களை பெறு­வதில் சிரமம் ஏற்­பட்­ட­மை­யி­னா­லேயே இவற்­றை­மீள வழங்­கு­வதில் காத­ல­தா­மதம் ஏற்­பட்­டி­ருந்­தது.

படை­யினர் வச­மி­ருந்த காணி­களில் பெரும்­பான்­மை­யான காணிகள் மீளவும் வழங்­கப்­பட்­டுள்­ளன. பலாலி, முகாமை அண்­மித்த காணிகள் கூட மீள கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. 2009 ஆம் ஆண்­டுக்கு முன் யாழ்ப்­பா­ணமே முகா­மாக இருந்­தது. தற்­போது அந்த நிலை மாற்­றப்­பட்­டுள்­ளது. மக்­களின் சுதந்­தி­ரத்தை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம்.

கேள்வி:- வேறு என்ன நட­வ­டிக்­கை­களை நீங்கள் மேற்­கொண்­டி­ருந்­தீர்கள்?

பதில்:- யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற குழுக்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை நாம் மீளப்­பெற்றோம். வடக்கில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மிகுந்த சிர­மத்தின் மத்­தியில் இந்தப் பணி­யினை மேற்­கொண்டோம். ஆனால் இந்த செயற்­பாட்டை கூட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அர­சாங்­கத்­திற்கு உத­விய இந்த இயக்­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்து ஆயு­தங்­களை நாம் பெற்­றி­ருந்தோம். வடக்கில் முன்னர் தேர்­தல்­களை நடத்­தினால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆயுத தாரி­களின் விடயம் தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தும். ஆனால் இப்­போது அந்த நிலை இல்லை.

இந்த விட­யத்தில் நாம் நேர்­மை­யான தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்தோம்.

தற்­போது வடக்­கிற்கு யாழ்­தேவி செல்­கின்­றது. இது முக்­கிய விட­ய­மாகும். 1970 களில் நான் படையில் கட­மை­யாற்­றி­ய­போது இரவு ரயி­லேயே காங்­கே­சன்­துறை சென்று வந்தேன். இப்­போது மீண்டும் அந்த நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

கேள்வி:- அர­சாங்கம் எத­னையும் செய்­யா­மை­யினால் ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தாக கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. இது குறித்து உங்­களின் கருத்து என்ன?

பதில்:- இந்த முடிவில் கூட்­ட­மைப்பில் உள்ள சிலர் உடன்­ப­ட­வில்லை என்று தெரி­கின்­றது. அர­சாங்கம் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­களில் செய்­த­வற்றை பார்க்­க­வேண்டும். யுத்தம் முடி­வ­டைந்த நிலையில் 3 இலட்சம் மக்கள் அக­தி­க­ளாக இருந்­தனர். கண்­ணி­வெ­டிகள் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன. 13 ஆயிரம் விடு­த­லைப்­பு­லிகள் சர­ண­டைந்­தி­ருந்­தனர். 5 ஆயிரம் புலி உறுப்­பி­னர்கள் தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஐந்து வரு­டங்­க­ளுக்குள் 3 இலட்சம் மக்­களை மீளக்­கு­டி­யேற்றி புலி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்து சமூ­கத்­துடன் இணைத்து தடுப்பு முகாம்­களில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை விடு­வித்து கண்­ணி­வெ­டி­களை அகற்றி மக்­களை இயல்பு வாழ்க்­கைக்கு கொண்­டு­வந்­துள்ளோம். இதேபோல் ஆயு­தக்­கு­ழுக்­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­க­ளையும் களைந்­துள்ளோம். அத்­துடன் அபி­வி­ருத்­தி­க­ளையும் நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

வடக்கில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்கள், மாகா­ண­சபைத் தேர்­தல்கள் என்­ப­வற்றை நீதி, நியா­ய­மாக நடத்­தினோம். இவ்­வாறு அர­சாங்கம் மேற்­கொண்ட சேவை­களை கூட்­ட­மைப்பு கூற­வில்லை. வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பு வெற்­றி­பெறும் என்று தெரிந்­தி­ருந்தும் நாம் தேர்­தலை நடத்­தினோம். இவ்­வா­றன நிலையில் கூட்­ட­மைப்­பினர் தெரி­விக்கும் குற்­றச்­சாட்டு நியா­ய­மா­னதா? நாம் மக்­க­ளுக்கு . தேவை­யா­ன­வற்றை செய்­துள்ளோம்.

யாழ். நூல­கத்தை எரித்­தது யார்? மாவட்ட அபி­வி­ருத்தி தேர்­தலில் குழப்­பத்தை உரு­வாக்­கி­யது யார்? 1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்­திற்கு பொறுப்பு யார்? என்­பது பற்றி நாம் சிந்­திக்­க­வேண்டும். தற்­போது அளுத்­கம, வன்­முறை சம்­பவம் தொடர்பில் சிலர் பேசு­கின்­றனர். இந்தச் சம்­பவம் தொடர்பில் தகவல் கிடைத்­ததும் பொலிஸ்மா அதி­பரை அங்கு அனுப்­பினேன். பொலி­ஸாரை அங்கு அனுப்­பினோம், விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை அனுப்­பினேன். பின்னர் இரா­ணு­வத்­தி­னரை அனுப்பி உட­ன­டி­யா­கவே வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்­தினேன்.

ஆனால் 1983 ஆம் ஆண்டு நடந்­தது என்ன? கப்­பலில் ஏற்றி தமி­ழர்­களை யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பி­வைத்­தனர். இதனை இந்த மக்கள் மறக்க முடி­யுமா?

ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இப்­படி நடக்­க­வில்லை. மக்கள் இதனை மறந்­து­வி­டக்­கூ­டாது.

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பாடு சரி­யா­னதா?

பதில்:- இந்தத் தேர்­தலில் எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு கூட்­ட­மைப்­பிற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வாக கார­ணங்­களை சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கினை பாது­காப்­ப­தற்­காக மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்தம் இல்லை என்றும், தமிழ் மக்­களின் வாக்­குக்­களைப் பெறு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என்றும் கூட்­ட­மைப்பு கூறி­யுள்­ளது.

மைத்­தி­ரியை ஆத­ரித்­த­மைக்­கான காரணம் என்ன என்­பதை கூற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். காரணம் இன்றி ஆத­ரித்து விட்டு தேர்­தலில் வெற்றி பெற்ற பின்னர் கூட்­ட­மைப்பின் கோரிக்­கையை அவர் ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் பின்னர் யுத்தம் செய்­வதா? ஆயுதம் ஏந்தி போரா­டு­வதா?

ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ செயற்­பாட்டில் பல விட­யங்­களை காண்­பித்­துள்ளார். சமா­தானம், ஸ்திரத்­தன்­மையை அவர் செயற்­பாட்டில் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அர­சியல் வேறு­பா­டுகள் இருந்தால் பேசித் தீர்த்­தி­ருக்­கலாம். இந்த நிலையில் அவ­ருக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை அளித்து கூட்­ட­மைப்­பினர் பார்த்­தி­ருக்­கலாம்.

மைத்­தி­ரியை எந்­த­வொரு இணக்­க­மு­மின்றி பேச்­சு­வார்த்தை இன்றி ஒப்­பந்தம் இன்றி எப்­படி கூட்­ட­மைப்பு ஆத­ரித்­தி­ருக்க முடியும். தெற்கு மக்­க­ளி­டமும் வடக்கு மக்­க­ளி­டமும் உண்­மையை மறைத்து கூட்­ட­மைப்ப செயற்­ப­டு­கின்­றது. இத்­த­கை­ய­வர்­களை எவ்­வாறு சிறந்த தலை­வர்­க­ளாவர். இத்­த­கைய செயற்­பாடு ஒப்­பந்தம் செய்து கொள்­வ­தை­விட மோச­மா­ன­தாகும். தெற்கு மக்­க­ளையும் வடக்கு மக்­க­ளையும் ஏமாற்றும் வகையில் செயற்­பட்­டுள்ள கூட்­ட­மைப்பு மைத்­தி­ரிக்கு வழங்­கிய சந்­தர்ப்­பத்தை ஏன் ஜனா­தி­ப­திக்கு வழங்­க­வில்லை.

அர­சாங்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ராக இருந்­தவர், கட்­சியின் செய­லா­ள­ராக செயற்­பட்­டவர். அவரின் கொள்­கையும், ஜனா­தி­தியின் கொள்­கையும் ஒன்­றா­கவே இருந்­தது. ஜனா­தி­ப­தியின் கொள்­கையில் நின்ற மைத்­தி­ரி­யிடம் இதனை எதிர்­பார்க்­கிறோம் என கூட்­ட­மைப்பு கூற­வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாமல் மக்­களை இவர்கள் ஏமாற்­று­கின்­றனர்.

மைத்­தி­ரி­யுடன் ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறி இரு பகுதி மக்­க­ளையும் ஏமாற்­றவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் அனை­வ­ரி­டமும் பழி­வாங்கும் எண்­ணமே காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்­தலின் போது வட­ப­குதி வாக்­க­ளிப்பை தடுப்­ப­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றதே. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.

பதில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அவ்­வாறு நடை­பெற்­றது. ஜனா­தி­பதி மஹிந்­தவின் கீழ் இடம் பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தல்கள், வட­மா­கா­ண­சபை தேர்­தல்கள் மற்றும் பாரா­ளு­மன்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களின் போது வாக்­க­ளிப்­ப­தற்கு எங்­கா­வது தடுக்­கப்­பட்­டதா? ஜனா­தி­ப­தியின் ஆட்­சியில் தான் வடக்கு மக்கள் நீதி­யா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். இதனை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நிரா­க­ரிக்க முடி­யுமா?

கேள்வி:- கூட்­ட­மைப்பின் ஆத­ர­வினை அர­சாங்கம் கோரி­யி­ருந்­ததா?

பதில்:- அதற்கு சம்­பந்­தனை பிடிக்­க­வேண்­டுமே, ஜனா­தி­பதி வட­ப­குதி மக்­க­ளு­டன்தான் பேசினார்.

கேள்வி:- மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் முடி­வடை அறி­விக்கும் போது சர்­வா­தி­கார ஆட்­சியை நோக்கி இலங்கை செல்­வ­தாக கூட்­ட­மைப்பு குற்றம் சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் உங்­களின் பதில் என்ன?

பதில் :- 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்த நிலை­யுடன் ஒப்­பிட்­டுப்­பார்த்தால் கேலிக்­கு­ரி­ய­தாகும்.

கேள்வி:- அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ரிஷாத் பதி­யு­தீனின் கட்சி விலகி எதி­ர­ணிக்கு ஆத­ரவு அளித்­துள்­ளது. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.?

பதில்:- ரிஷாத் பதி­யுதீன் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்ன நிலைப்­பாடு எடுக்­க­வுள்­ளது. வன்­னிப்­ப­கு­தியில் மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு பகு­தி­களில் தமி­ழர்­க­ளது காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ­ரினால் முஸ்­லிம்கள் அங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. மீன்­படி தொழி­லுக்கு தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இப்­போது ரிஷாத் எதி­ர­ணியில் இடம் பெற்­றுள்ளார். இந்த நிலையில் முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்தை நிறுத்­து­மாறு கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­யிடம் கோருமா? சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு கூற முடி­யுமா?

ஜனா­தி­ப­தி­யுடன் ரிஷாட் இருக்கும் போது காணி சுவீ­க­ரிப்பு தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்­பட்­டன. இன்று மைத்­தி­ரி­யிடம் அவர் சென்ற பின் அவ­ருக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விட்­டதா?

கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் என்ன செய்யப் போகின்­றது. இதற்கு கூட்­ட­மைப்பு பத­ல­ளிக்­க­வேண்டும்.

கிழக்கில் அம்­பா­றை­யி­லும தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் ஹக்கீம், தற்­போது எதி­ர­ணியில் நிற்­கின்றார். இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண கூட்­ட­மைப்பு என்ன செய்­யப்­போ­கின்­றது. மட்­டக்­க­ளப்­பிலும் தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை கூட்­ட­மைப்­பி­னரால் மீளப்­பெற முடி­யுமா?

ஜனா­தி­ப­தி­யுடன் இருக்கும் போது இவர்கள் கெட்­ட­வர்­க­ளாக இருந்தனர். தற்போது மைத்திரியுடன் இணைந்ததும் நல்லவர்களாக மாறிவிட்டனரா? இது குறித்தும் கூட்டமைப்பு பதிலளிக்கவேண்டும்.

கேள்வி:- மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைஅமைத்துக்கொடுக்கும் பணி ஆரம்பித்துள்ளதா?

பதில்:- ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியில் எதனையும் செய்து காண்பிக்கின்றார். அங்கு வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேள்வி:- காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- யுத்தத்தின் போது மூவாயிரம் இராணுவம் வரை காணாமல் போயிருந்தனர். அவர்களது சடலங்கள் கூட கைப்பற்றப்பட்டிருக்கவில்லை. 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆயிரம் இராணுவத்தினர் வரை பலியாகியிருந்தனர். இராணுவத்தினரிலேயே மூவாயிரம் பேரைக்காணவில்லை என்றால் புலிகள் தரப்பிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள் சண்டைகளில் இறந்திருக்கலாம். ஆனால் அதனை அறியமுடியாது. இதுதான் நிலைப்பாடாக உள்ளது. இருந்தபோதிலும் காணாமல் போனவர்களுக்கு மரண அத்தாட்சிப்பத்திரங்களை வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தகாலத்தின் போது படைவீரர்களது தாய்மார் என்னை வந்து சந்திப்பார்கள், தான் சாத்திரம் பார்த்ததாகவும், காணாமல் போன தனது மகன் கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தாயார் தெரிவித்தார். ஆனால் அந்த வீரர் சண்டையில் உயிரிழந்தமை எமக்குத் தெரியும். இவ்வாறு காணாமல்போனோரது நிலைமை இருக்கின்றது. இவர்கள் யுத்தத்தில் உயிரிழந்திருப்பர். ஆனால் அதனை நாம் நிரூபிக்க முடியாத நிலை இருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply