தேர்தல் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்!: தேசப்பிரிய

தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் .வாக்களிப்பு நடைபெறுவது முதல் இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரையில் முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற எவ்வித வாய்ப்பும் கிடையாது. தேர்தல் பொறிமுறைமை மிகவும் வலுவானது. தேர்தல் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.வாக்களித்தல், வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்லல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட உள்ளது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கண்காணிப்பு செய்ய இம்முறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டு அச்சிடும் போதும் இரகசிய இலக்க முறைமையொன்று பின்பற்றப்பட்டுள்ளது.

தேர்தல் எவ்வளவு நேர்மையாக நடத்தப்பட்டாலும் தோல்வியடையும் வேட்பாளர் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்துவது வழமையானது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply