வடக்கில் தமிழர்கள் வாக்களிப்பதனை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது : ராஜித சேனாரத்ன

வடக்கில் உள்ள தமிழ் மக்­களை இரா­ணு­வத்தின் மூலம் அச்­சு­றுத்தி தமி­ழர்­களின் வாக்­க­ளிப்­பினை தடுக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என குற்றம் சுமத்தும் பொது எதி­ரணி, அடக்குமுறை­களை கட்­ட­விழ்த்­தாலும் மக்கள் மாற்­றத்­திற்­காக வேண்டி வாக்­க­ளிப்­பார்கள் எனவும் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று ஏற்­பாடுசெய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

பொது எதி­ர­ணியின் பயணம் இன்று மிக பல­மா­ன­தா­கவும் மக்­களின் நம்­பிக்­கை­யினை பெற்­ற­தா­கவும் அமைந்துவிட்­டது. ஏழு பேருடன் ஆரம்­பித்த எமது பய­ணத்தில் இன்­றுடன் இரு­பத்து நான்கு முக்­கிய உறுப்­பி­னர்­களும் பல நூற்­றுக்­க­ணக்­கான பிர­தேச சபை உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் இணைந்துவிட்­டனர். இது இன்னும் தொடரும். இலங்­கையின் அர­சியல் வர­லாறு கடந்த காலங்­களில் பல பாடங்­களை கற்­பித்துக்கொடுத்­துள்­ளது. 1964முதற்­கொண்டு 2004 வரையில் அரசில் இருந்து பலர் வெளி­யே­றி­யுள்­ளனர். இதில் பல சந்­தர்ப்­பங்­களில் அரசில் இருந்து வெளி­யே­றிய பின்னர் அர­சாங்­கத்தை வீழ்த்­திய வர­லா­று­க­ளையும் நாம் பார்த்­துள்ளோம். எனினும் இம்­முறை இலங்கை வர­லாற்றில் மிக அதி­க­மான அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளி­யேறி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பல­மா­ன­தொரு பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்­கி­யுள்ளோம். நிச்­ச­ய­மாக இது நாட்டில் மிகப் பெரிய மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தி விடும்.

மேலும் எமது கருத்­துக்­க­ளையும் தாண்டி புல­னாய்வு பிரிவின் தகவல் கூட அர­சாங்­கத்­திற்கு பாத­க­மான பெறுபேற்றினை பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது. புல­னாய்வுப் பிரிவின் தக­வல்­க­ளுக்கு அமைய 48 வீத மக்­களின் ஆத­ரவு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் 37 வீத ஆத­ரவு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கும் 14 வீத மக்கள் முடிவு யாரை ஆத­ரிப்­பது என்ற குழப்­பத்­திலும் இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது. இது­த­விர 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­திக்கு கிடைத்த வாக்­கு­களில் 23 வீத­மான வாக்­குகள் வீழ்ச்சி கண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றது. எனவே இதுவே ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் வீழ்ச்­சிக்கு நல்­ல­தொரு உதா­ர­ண­மாக கொள்ள முடியும். மக்கள் அலை தற்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் திரும்­பி­யுள்­ளது.

வடக்கில் அச்­சு­றுத்தல்

மேலும் தமிழ் மக்­களை அச்­சு­றுத்தி தமிழ் மக்கள் வாக்­க­ளிப்­ப­தனை தடுக்கும் முயற்­சி­யினை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தையும் 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான வெளிப்­பி­ர­தே­சங்­களில் உள்ள இரா­ணு­வத்­தையும் சிவி­லி­யன்­க­ளாக பயன்­ப­டுத்தி வடக்கில் ஒவ்­வொரு கிரா­மங்­க­ளுக்­குமாய் அனுப்பி தமிழ் மக்­களை அச்­சு­றுத்­து­வ­துடன் தமது வாக்­க­ளிப்­பினை தடுக்கும் நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொண்டு வரு­கின்­றது. எனினும் தமிழ் மக்­களின் ஆத­ரவு எப்­ப­டியும் எமக்கு கிடைக்கும். அச்­சு­றுத்­தல்கள் மிரட்­டல்­க­ளுக்கு அஞ்சி மக்கள் வாக்­க­ளிப்­பினை நிரா­க­ரிக்க மாட்­டார்கள்.

மேலும் சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுடன் தொடர்பு இருப்­ப­தாக அர­சாங்கம் சித்தி­ரிக்­கின்­றது. அதே போல் பொது எதி­ரணி உறுப்­பி­னர்­களின் வங்கிக் கணக்­கிற்கு சட்டவிரோத பணப் பரிமாற்றத்தினை செய்து எம்மை புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு இருப்பதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். எனவே இறுதித் தினங்களில் இது நடந்தால் எமது வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றப்படுமாயின் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply