இனரீதியான நிர்வாக அலகு கோரிக்கை யுத்தத்திற்கு நிகரான சவால்

யுத்தத்துக்கு எவ்வகையான சவாலை நாம் எதிர்கொண்டோமோ அதற்கு நிகரான சவாலை ‘இன ரீதியான நிர்வாக அலகு’ கோரிக்கையும் உருவா கியுள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்தமிழ் ஈழம் அமைப்பதில் தோல்வி கண்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள் தீட்டியுள்ள சதித்திட்டத்தின் பின்னணி யிலேயே சிறுபான்மை அரசியற் கட்சிகள் இனரீதியான நிர்வாக அலகு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அரசியலுக்கூடாக இன ரீதியான நிர்வாக அலகுகளை ஸ்தாபிக்க எடுக்கும் முயற்சியானது யுத்தத்தின் ஒரு மாற்று வடிவமெனவும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத் தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை யாற்றுகையிலேயே அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

இனரீதியான நிர்வாக அலகுகளை நிறுவுவதன் மூலம் நாட்டை துண்டு துண்டாக பிரிக்கும் செயலிற்கு எதிரணி துணை போகின்றது. எல்.ரீ.ரீ.ஈ. வடக்கு, கிழக்கில் தமிழ் இனத்தை பிரதிபலித்து தனியானதொரு நிர்வாக அலகு கோரியிருந்தது. அதே வழியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபையின் அதிகாரங்களை அதிகரிக்க கோருகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனியானதொரு நிர்வாக அலகினை கோருகின்றது. இவ்வாறு இனரீதியான நிர்வாக அலகுகளாக கூறுபோட்டால் தாய்நாட்டின் இறுதி நிலைதான் என்னவென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை சந்திரிகா குமாரதுங்கவின் வழிகாட்டலின் கீழ் செயற்படும் எதிரணிக்குள் பாரிய குழப்பம் நிலவுவதும் தற்போது சாட்சிகளுடன் அம்பலமாகியிருப் பதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

வடக்கிற்கு சென்றுள்ள சந்திரிகா அங்குள்ள பாதுகாப்பு முகாம்களை மாற்றியமைப்பதாகவும் வட மாகாண சபையின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதே நிலையில், சம்பிக்க ரணவக்க மாகாண சபையின் அதிகாரங்களை குறைத்து ஆளுநரின் அதிகாரத்தை கூட்ட வேண்டுமென தெரிவித்து வருகின்றார். ஒரே கட்சிக்குள் வானத்தையும் நிலத்தையும் முடிச்சுப் போடுவதாக இவர்களது கருத்துக்கள் உள்ளன.

இவர்களிடையே பாரிய கருத்து முரண்பாடுகள் இருந்த போதும் சர்வதேசத்தின் பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் இவர்கள் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றனர் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply