ஒபாமா வருகையின் போது தாக்குதலா ? சதி திட்டத்துடன் பாக்., பயங்கரவாதிகள்
இந்திய சுதந்திரதின விழாவில் முதல் முறையாக கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரவுள்ளார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், மேலும் இந்நேரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பழி தீர்த்து கொள்ளவும் தலிபான் மற்றும் இ தெக்ரிக் தலிபான் அமைப்பினரும் திட்டமிட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரத்தகவலை மேற்கோள் காட்டி பி.டி.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் சாம்பா, கத்துவா பகுதிகளில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். இதனை முறியடிக்க பாதுகாப்பு படையினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடந்த வியாழக்கிழமை முதல் இது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையோர கிராம மக்கள் அச்சத்தில் பலரும் தங்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து மாற்று இடம் நோக்கி புறப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவில் 30 இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு நிலைகளை குறி வைத்து பாக்., படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பல இடங்களில் தோட்டாக்கள் சிதறி கிடக்கிறது.
இது தொடர்பாக பி.டி.ஐ., செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு மற்றும் உள்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, இந்தியா- பாக்., எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தாக்குதல் நேரத்தில் பயங்கரவாத அமைப்பினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். இதற்கென எல்லையில் 8 பகுதிகளில் பயங்கரவாதிகள் தயார் நிலையில், இந்த நேரத்தை பயன்படுத்த எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்தியாவிற்குள் வந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடவும் திட்டம் வைத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையில் , இது போன்ற சதி செயலை நடத்தி தங்களின் எதிர்ப்பை காட்ட முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply