தேர்தல் பணிகளில் இராணுவம் ஈடுபடவில்லை
நாட்டின் தேசிய பாதுகா ப்பைக் கருத்திற்கொண்டு இராணுவம் வழமை போன்று செயற்படுகின்றதே தவிர தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகளிலோ தேர்தல் பாதுகாப்புடனோ எந்தவித தொடர்புகளும் இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.தேர்தலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸாரே மேற்கொள் கின்றனர். பொலிஸாருக்குத் தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு உதவியாக ஒத்துழைக்க இராணுவம் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கல்குடா பிரதேசத்தில் “லாயா வேவ்ஸ்” என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரால் புதிதாக நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டல் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவத் தளபதியிடம் நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமாக இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அவற்றில் ஏதும் உண்மையுள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது.
அவ்வாறு சொன்னவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் போதிய அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக எவரையும் அனுப்ப வேண்டிய தேவையில்லை.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயத்தில் இராணுவத்தைத் தவிர வேறு எவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை. 1971, 1988, 89 களிலும் அதே போன்று 1980 லிருந்து 2009 வரையான 30 வருட காலம் தொடர்ச்சியாக நாம் செய்தது நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே தவிர வேறு எதனையும் அல்ல.
அதே போன்று, நாட்டில் வன்முறைகளற்ற, சமாதானமும் அமைதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெற்று முடிந்தால் நாங்கள்தான் மிகவும் சந்தோஷமடைவோம். அது அவ்வாறே நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அனைவரும் அமைதியான முறையிலும் பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும்செயற்படுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
இதேவேளை, சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்ட ஹோட்டல் துறை ஆரம்பிக்க முடியாத பிரதேசங்களில் இது போன்ற ஹோட்டல்களை ஆரம்பித்து சுற்றுலாத்துறை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
எதிர்காலத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் தியத்தலாவை பிரதேசங்களில் ஹோட்டல்கள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
மேஜர் ஜெனரல்களான மஹிந்த ஹதுருசிங்ஹ, அம்பன்பொல, துரை ரட்ணசிங்கம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply