615 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 760 மில்லியன் ரூபாய் சன்மானம்: பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள 615 தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. எனவே இத்தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 760 மில்லியன் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்ததுள்ளது. தெஹ்ரிக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவனான பசுல்லா மற்றும் லஷ்கர்-இ-இஸ்லாம் தீவிரவாத குழுவின் தலைவனான மங்கல்பா ஆகியோரின் தலைகளுக்கு மட்டும் தலா 10 மில்லியன் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 615 தீவிரவாதிகளை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் தரும் வகையில் 760 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் கைபர்-பக்துங்குவா மாகாண தகவல் துறை அமைச்சர் முஸ்டாக் கனி தெரிவித்தார்.அண்மையில் பெஷாவரில் நடந்த பள்ளிக் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, அமைதியற்ற வடமேற்கு பழங்குடி பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply