கூட்டணியில் இருந்து ராமதாஸ் வெளியேறினாலும் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
பாரதீய ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்று இருந்தாலும் மத்திய பா.ஜனதா அரசை டாக்டர் ராமதாஸ் விமர்சித்து வருகிறார். இதுபற்றி ஏற்கனவே தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ், ‘ஆளுங்கட்சியின் குறைகளை விமர்சிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி அமையும். பா.ஜனதா தலைமையில் கூட்டணி என்பது அவர்கள் கருத்து. கூட்டணியில் நீடிப்பது பற்றி கட்சி பொதுக் குழுவில் முடிவு செய்வோம் என்றார்.பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறி விட்ட நிலையில் பா.ம.க.வும் வெளியேறுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி இன்று சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:–
கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இது அல்ல. அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் வெளியே செல்ல கூடாது என்பதுதான் எனது எண்ணம்.
கூட்டணி என்பது நீண்ட கால நன்மை கருதி ஒரு வழிப்பாதையாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். யார் வெளியேறினாலும் பா.ஜனதாவுக்கு பாதிப்பு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply