எதிரணியை உருவாக்கியிருப்பதே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : மாதுலுவாவே சோபித தேரர்

ஒரு குடும்ப அர­சி­ய­லுக்கு எதி­ராக சகல இனத் தலை­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து பொது எதி­ர­ணி­யினை உரு­வாக்­கி­யி­ருப்­பதே எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதுவே நாட்டின் ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்க முதல் படி­யென தெரி­வித்த கோட்டை நாக விகா­ரையின் விகா­ர­ாதி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தீவி­ர­வா­திகள் குடி கொண்­டி­ருப்­பது அர­சுக்குள் எனவும் குற்றம் சுமத்­தினார். எதிர்க்­கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்­பெற்ற பொது எதி­ர­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாட்டின் தலை­வரை தெரிவு செய்ய இன்­னமும் இருப்­பது மூன்று நாட்­களே. இருக்கின்றன. இந்­நி­லையில் அனை­வரும் எதிர்­பார்ப்­பது அமை­தி­யா­ன­தொருஇ நியா­ய­மா­ன­தொரு தேர்தலையே. இத­னையே நாமும் வலி­யு­றுத்­து­கின்றோம். எனினும் ஜனா­தி­பதி தனது முழு­மை­யான அதி­கா­ரத்­துடன் களத்தில் இறங்­கி­யுள்ளார். ஊட­கங்­க­ளையும் அரச நிறு­வ­னங்­க­ளையும் தனது பக்கம் ஈர்த்து தனது அடக்­கு­முறை அர­சி­யலை மேற்­கொள்­கிறார். பொலிஸும் இரா­ணு­வமும் அரசின் பக்கம் செல்­கின்­றது. தேர்தல் சட்டம் மீறப்­பட்டு இவர்­களின் தேர்தல் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

பொய்­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு எம்மை தவ­றாக சித்­தி­ரிக்­கின்­றனர். எனினும் அர­சுக்குள் இருக்கும் தீவி­ர­வா­திகள் இவர்­களின் கண்­க­ளுக்கு தெரி­ய­வில்லை. இது மக்­க­ளுக்கு தெரியும். இம்­முறை தேர்­தலில் என்ன செய்­தாலும் வெற்றி இருப்­பது பொது எதி­ர­ணியின் பக்­கமே. நாம் இன்று அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து விட்டோம். சிங்­களஇ தமிழ்இ முஸ்லிம் அர­சியல் தலைமை அனைத்தும் ஒன்­றி­ணைந்து விட்­டது. இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியே. எனவேஇ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகத்தை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply