சர்வதேச விடுமுறை தினமாக வெசாக் – ஐ.நா.அங்கீகாரம்
வெசாக் விடுமுறை தினத்தை ஐ.நா.வின் சர்வதேச விசேட விடுமுறை தினமாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அங்கீகரித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி இதற்கான அங்கீகாரத்தை சபை வழங்கியுள்ளது. 1999 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமர் இதற்கான பிரேரணையை ஐ.நா. பொதுச் சபையிடம் முன்வைத்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் கீழ் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி பாலித்த கோஹனவின் முயற்சியினால் இந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளது.
இந்த முயற்சிக்கு நியுயோர்க்கிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி குருனேகொட பியதிஸ்ஸ தேரரின் வழிகாட்டல் துாண்டல் காரணியாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா. பொதுச் சபையினால் கிறிஸ்தவர்களின் விசேட தினங்கள் இரண்டும், முஸ்லிம்களின் விசேட தினங்கள் இரண்டும் ஏற்கனவே விடுமுறை தினங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply