ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த சிரியாவின் முக்கிய நகரத்தை குர்திஷ் படை மீட்டது
ஈராக் மற்றும் சிரியாவை ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் நாட்டை உருவாக்கி உள்ளனர். அந்த பகுதிகளை மீட்பதற்கு ஈராக் மற்றும் சிரியா படைகளும், குர்திஷ் படைகளும் போரிட்டு வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈராக், சிரியா எல்லையில் காபோன் என்ற நகரம் உள்ளது. மிக முக்கிய நகரமான இதை கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். மேலும் காபோன் மாவட்டம் முழுவதையும் ஐ.எஸ். படை கைப்பற்றி இருந்தது.இதை மீட்க குர்திஷ் படைகள் தொடர்ந்து போரிட்டு வந்தன. கடந்த ஒரு வாரமாக குர்தீஸ் படைக்கும், ஐ.எஸ். தீவிரவாதிக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வந்தது.
அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க படை 11 முறை விமான தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதை பயன்படுத்தி குர்திஷ் படை முன்னேறியது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்து பின்வாங்கினார்கள். இதன் காரணமாக தற்போது காபோன் நகரம் முழுவதையும் குர்திஷ் படை மீட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காபோன் மாவட்டத்தின் 80 சதவீத பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாகவும் குர்திஷ் படை கூறியிருக்கிறது. தற்போது அருகிலுள்ள மக்தலா, கான்கோடான் மாவட்டங்களை ஐ.எஸ். படையிடம் இருந்து மீட்பதற்காக குர்திஷ் படை முன்னேறி வருகிறது.
இதற்கிடையே ஈராக்கில் உள்ள அர்பான் என்ற இடத்தில் நேற்று தீவிரவாதிகள் ராணுவ முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 23 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply