விபத்துக்குள்ளான ஏர் ஏஷியா விமானம்: கருப்புப் பெட்டியை மீட்கும் பணி தீவிரம்

விபத்துக்குள்ளான ஏர்-ஏஷியா விமானத்தின் வால் பகுதி இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடுதல் மட்டும் மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கருப்புப் பெட்டி இருக்கும் இந்தப் பகுதியை மீட்பதே இன்றைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை விமானத்தின் 12 பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீட்புப் பணி தொடங்கி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் கருப்புப் பெட்டியை மீட்க வாய்ப்பு உருவாகியுள்ளதால் விமான விபத்திற்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி இந்தோனேஷியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் காணாமல் போனது. சில மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் விமானம் ஜாவா கடல் பகுதியில் நொறுங்கி விழுந்தது கண்டறியப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply