அமெரிக்காவில் ஊழல் வழக்கில் முன்னாள் கவர்னருக்கு 2 ஆண்டு சிறை

அமெரிக்காவில் வர்ஜினியா மாகாணத்தில் 2010௧4 காலக்கட்டத்தில் கவர்னர் பதவி வகித்தவர், குடியரசு கட்சியை சேர்ந்த பாப் மெக்டொனால் (வயது 60). அவர் கவர்னர் பதவி வகித்த போது, ஒரு ஊட்டச்சத்து உணவினை சந்தைப்படுத்தி, பிரபலம் ஆவதற்கு உதவிகள் செய்து அதற்கு கைமாறாக அந்த நிறுவனத்திடம் இருந்து பணத்தையும், பரிசுப்பொருட்களையும் லஞ்சமாக பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ஸ்பென்சர், பாப் மெக்டொனால் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply