பனாமாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவையொட்டிய பசிபிக் பெருங்கடல் பகுதியில், புதன்கிழமை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியாய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நில நடுக்கம், பனாமாவின் பூன்டா டீ புரிகா நகருக்கு தெற்கே 245 கி.மீ. தொலைவில், 33 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 11.07 மணிக்கு ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

நில நடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply