கிழக்கு பாரிஸில் யூத சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் துப்பாக்கிச்சூடு

பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நடந்துள்ள துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொலிஸார் அந்தக் கடையை சுற்றிவளைத்துள்ளனர். வென்சென் மாவட்டத்தில் உள்ள இந்தக் கடையில் ஆயுததாரிகள் பலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் அவர்களின் வகுப்புகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகின்ற ஆயததாரி, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் நேற்று வியாழன்று அதிகாலை பொலிஸ் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றவராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

முன்னதாக, இந்த ஆயுததாரி, ஷார்லி எப்தோ சஞ்சிகை மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற குவாஷி சகோதரர்களுடன் தொடர்புடையவர் என்று பிரான்ஸ் ஊடக வட்டாரங்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply