அமெரிக்காவுக்கு சீனாவின் கடும் எதிர்ப்பு

சீன தரப்பின் அனுமதியை பெறாமல், அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த Impeccable என்னும் கண்காணிப்பு கப்பல், தென் சீனக் கடலிலுள்ள சீனாவின் உரிமைப் பொருளாதார பிரதேசத்தில் நுழைந்துள்ளது. இது குறித்து, சீனா அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மார்ச் 11ம் திகதி பெய்சிங்கில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Ma Chaoxu இதை கூறினார்.

Impeccable எனும் அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்புக் கப்பல் தென் சீனக் கடலிலுள்ள சர்வதேச கடல் பரப்பில் வழமையான நடவடிக்கையாக நின்ற போது சீனாவின் கடற்படைக் கப்பல் தொந்தரவு செய்தது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை, வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சகமும் மார்ச் 9ம் திகதி தெரிவித்தன. இது குறித்து பேசுகையில், அமெரிக்க தரப்பின் கூற்று உண்மைக்கு புறம்பானது. சீனா இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று Ma Chaoxu தெரிவித்தார். வெளிநாட்டு கப்பல் சீனாவின் தனி உரிமைப் பொருளாதார பிரதேசத்தில் நடவடிக்கை மேற்கொள்வது என்ற பிரச்சினை, ஐ.நாவின் கடல் சட்டம், சீன மக்கள் குடியரசின் தனி உரிமைப் பொருளாதார பிரதேசம் மற்றும் பெரும் கண்டக் கடல் திட்டு பற்றிய சட்டம் முதலியவற்றில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இணங்க, சீன அரசு எப்போழுதும் கண்டிப்பான முறையில் இத்தகைய நடவடிக்கையை கையாண்டு வருகின்றது என்று அவர் குறிபிட்டார்.

அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்புக் கப்பல், மேற்படி சர்வதேச சட்டத்தையும் சீனாவின் சட்டத்தையும் மீறியுள்ளது. அமெரிக்கா உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, இத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று சீனா கோருவதாக அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply