கண்டிக்கு சென்ற ஜனாதிபதி மும் மதத் தலைவர்களை சந்தத்து ஆசி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்து மும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று கொண்டார்.கொழும்பிலிருந்து இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து மல்வத்தை , அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்று கொண்டார்.இதற்கு பின்னர் கண்டி ஆயர் இல்லத்திற்கு சென்று ஆயர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிகளையும் பெற்றுகொண்டார். மேலும் கண்டியில் உள்ள மீராமக்காம் பள்ளிவாசலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.இந்த விஜயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply