தேசிய பட்­டியல் மூல­ம் அமைச்­ச­ர­வையில் மனோ?

ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலைவர் மனோ கணே­சனை தேசிய பட்­டியல் மூல­மாக பாரா­ளு­மன்­றத்­துக்குள் உள்­வாங்கி அமைச்­ச­ர­வையில் இடம்­பெ­ற­வைக்கும் முயற்­சிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப் படுகிறது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் தமிழ் பேசும் சிறு­பான்மை மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் முக­மாக கட்சி தலை­வர்­க­ளாக இருக்கும் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் அமைச்­ச­ர­வையில் நிய­மிக்­கப்­பட வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.முஸ்லிம் எம்­.பிக்­களும், முன்னாள் அமைச்­சர்­க­ளு­மான ரிசாத் பதூதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் ஐ.தே.க.வின் செயலாளரும் எம்.பி.யுமான கபீர் ஹஷிம் ஆகியோர் அமைச்­ச­ரவை அந்­தஸ்து கொண்ட அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­படும் முடிவு ஏற்­க­னவே பிர­தமர் அலு­வ­ல­கத்தால் எடுக்­கப்­பட்டு விட்­டது.

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா தொடர்­பா­கவும் ஆரா­யப்­ப­டு­வ­ரு­வ­தாக கூறப்­படும் நிலையில் முன்னாள் பிர­தி­ய­மைச்­சர்­களும், மலை­யக எம்­.பிக்­க­ளு­மான பழனி திகாம்­பரம், வி. இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் அமைச்­ச­ர­வையில் உள்­வாங்­கப்­ப­டலாம் என இந்த வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­க­வில்லை. ஐ.தே.க.வின் தேசிய பட்­டி­யலில் வெற்­றிடம் ஏற்­பட்டால் மட்­டுமே அவர் பாரா­ளு­மன்­றத்­துக்கு நிய­மிக்­கப்­பட்டு பின்னர் அமைச்­ச­ர­வையில் இடம் பெற முடியும். பொது எதி­ர­ணியின் ஸ்தாபக தலை­வர்­களில் ஒருவர் மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் செயற்­பட்ட எதி­ரணி எதிர்ப்பு இயக்­கத்தில் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெற்ற கட்­சித்­த­லைவர் என்ற அடிப்­ப­டை­களில், மனோ கணே­சனை பாரா­ளு­மன்­றத்­துக்குள் உள்­வாங்­கு­வ­தற்­காக ஐ.தே.க. தேசிய பட்­டியல் உறுப்­பினர் ஒரு­வரை இரா­ஜி­னாமா செய்­விக்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரிய வரு­கி­றது.

ஐ.தே.­க.வின் தேசிய பட்­டியல் மூலம், தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்­துக்கு, அனோமா கமகே, ஹர்ஷா டி சில்வா, திஸ்ஸ அத்­த­நா­யக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, டி. எம். சுவா­மி­நாதன், ஆர். யோக­ராஜன், ஏரான் விக்­கி­ர­ம­ரட்ன ஆகி­யோ­ருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் ஹசன் அலி மற்றும் அஸ்லாம் ஆகி­யோரும் 2010ஆம் வருட பொது தேர்­த­லை­ய­டுத்து நிய­மிக்­கப்­பட்­டனர்.

தற்­ச­மயம் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய பட்­டியல் மூல­மாக பாரா­ளு­மன்றம் வர உள்­ள­தா­கவும், மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­ச­ர­வையில் இடம்பெற தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் மறுத்துவிட்டன என்றும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று கூட்டமைப்பு அரசுக்கு கூறியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply