புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று அறிவிப்பு

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர். அமைச்சுகளின் பணிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுப்பதாக அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர்.புதிய அரசாங்கத்தில் இன்று 27 புதிய அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 8 பிரதியமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

1. ரணில் விக்ரமசிங்க – கொள்கைத் திட்டமிடல்
2. ஜோன் அமரதுங்க – சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
3. ஜோசப் மைக்கல் பெரேரா – உள்விவகாரம்
4. காமினி ஜயவிக்ரம பெரேரா – உணவுப் பாதுகாப்பு
5. மங்கள சமரவீர – வெளிவிவகாரம்
6. கரு ஜயசூரிய – பௌத்த சாசனம்
7. லக்ஸ்மன் கிரியல்ல – பெருந்தோட்டத்துறை
8. ரவி கருணாநாயக்க – நிதி
9. ரவூப் ஹக்கீம் – நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம் நீர்விநியோகம்
10. சம்பிக்க ரணவக்க – மின்வலு எரிசக்தி
11. ராஜித சேனாரட்ன – சுகாதாரம்
12. துமிந்த திஸாநாயக்க – வடிகாலமைப்பு
13. கபீர் ஹாசீம் – பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
14. எம்.கே.டி.எஸ். குணவர்தன – காணி
15. சஜித் பிரேமதாச – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி
16. விஜயதாச ராஜபக்ஸ – நீதி
17. கயந்த கருணாதிலக்க – ஊடகம்
18. அர்ஜூன ரணதுங்க – துறைமுகம் மற்றும் விமான சேவைகள்
19. அகில விராஜ் காரியவசம் – கல்வி
20. பழனி திகாம்பரம் – தோட்ட உட்டமைப்பு
21. டி.எம். சுவாமிநாதன் – இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்றம்
22. தலதா அதுகோரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
23. ரஞ்சித் மத்துமபண்டார – உள்நாட்டு போக்குவரத்து
24. பீ.ஹரிசன் – சமூக சேவைகள்
25. சாந்தனி பண்டார – மகளிர் விவகாரம்
26. ரிசாட் பதியூதின் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
27. நவீன் திஸாநாயக்க – சுற்றுலாத்துறை

இராஜாங்க அமைச்சர்கள்

1. நந்திமித்ர ஏக்கநாயக்க-   கலை, கலாசார இராஜாங்க அமைச்சர்

2. பைசர் முஸ்தபா-     விமான  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

3. பாலித ரங்கே பண்டார-    மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

4. துலிப்வெத ஆராச்சி-     மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

5. ரோஸி சேனாநாயக்க-    சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

6. ரஜீவ விஜேசிங்க-    உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

7. ருவன் விஜேவர்தன-   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

8. நிரோஷன் பெரேரா-   இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

9. கே.வேலாயுதம்-    பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

10. வீ. இராதாகிருஸ்ணன்-   கல்வி இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள்

1. சம்பிக்க பிரேமதாச-  கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்

2. ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர்

3. எரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்

4. சுஜீவ சேனசிங்க- பிரதி நீதி அமைச்சர்

5. வசந்த சேனாநாயக்க-  சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்

6. விஜயகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்

7. அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்

8. அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply