இலங்கையை மனித உரிமைக்கு மதிப்பளிக்கும் நாடாக காண்பதே எனது அபிப்பிராயம் – பாப்பரசர்

இலங்கையை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மத மற்றும் அரசியல் நல்லிணக்கம் உள்ள நாடாக காண்பதே தனது அபிப்பிராயம் பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த பாப்பரசர், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, பாப்பரசரின் விஜயம் இலங்கைக்கு பாக்கியம் என கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த பரிசுத்த பாப்பரசரை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்வை அடுத்து பாப்பரசர் விசேட வாகனத்தில் கொழும்பு நோக்கி வருகை தருகிறார். பாப்பரசரின் ஆசியை பெறவென கொழும்பு – நீர்கொழும்பு வீதி ஓரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply