இன்று மஹிந்தவும் மைத்திரியும் சந்திக்கின்றார்கள்
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை இன்று15ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக உடைவதை தடுக்கவே இச்சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீசுக தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை முக்கிய பொறுப்பிலும் அமர்த்தி கட்சியை பிளவுபடச் செய்யாதிருத்தல் மற்றும் ஐமசுமு ஆட்சியின் கீழுள்ள மாகாண சபைகளை அவ்வாறே நடத்திச் செல்வது போன்ற விடயங்கள் குறித்து இதில் பேசப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மைத்திரால இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தால் ஸ்ரீசுக மஹிந்த அணி மைத்திரியின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும். எதிர்கட்சி என்ற பொறுப்பு ஜேபிவி அல்லது ததேகூ க்கு சொல்லாது ஸ்ரீசுகயில் வைத்துக் கொள்வது சந்திப்பின் மற்றுமொரு நோக்கம். அரசியல் விளையாட்டு ஒன்றை ஆட மஹிந்த தயாராகி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி அரசியல் அனாதையாக்கி சந்திரிக்காவை அரசியல் கோமாளியாக்கவே மஹிந்த திட்டமிட்டுள்ளார்.
பொது வேட்பாளர் கட்சிசார்பற்ற ஒருவராக இருக்க வேண்டும் என தூய்மையான நாளைக்கான அமைப்புடன் மைத்திரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மைத்திரி ஸ்ரீசுக தலைவரானால் அந்த உடன்படிக்கை மீறப்படும். 100 நாள் வேலைத் திட்டத்தை தோல்வியடையச் செய்யும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply