மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானம் மரண தண்டனைக்குரிய குற்றம் : வாசுதேவ நாணயக்கார
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க கையளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம் மரண தண்டனைக்குரிய பாரிய குற்றம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க இந்த தலைமை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிந்தோம். அது எமக்கு தாக்கம் செலுத்து விடயமாக உள்ளது. அடிபணிதல் மாற்று தீர்வு அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply