மாத்தளையில் பொங்கல் தினத்தன்று ஆலய தேருக்கு தீ வைப்பு : இருவர் கைது
மாத்தளை நகரின் இந்து ஆலயங்களில் ஒன்றான நாகொல்ல மாடசாமி (கருப்புசாமி) ஆலயத்தின் தேர் பொங்கல் தினத்தன்று மாலை இனந்தெரியாதோரால் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவராக பணி புரியும் மாத்தளை மாநகர சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் எஸ். பிரகாஷ் தனது இல்லத்தருகில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இ.தொ.கா. பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் கட்டஅவுட்களுடன் தேர்தல் பிரசார அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் மாலையே அதே வீதியில் அமைந்துள்ள ஐ.ம.சு.மு.வின் ஆதரவாளர் ஒருவருக்கு சொந்தமான விருந்தினர் விடுதியொன்றும் பாரிய அளவில் தாக்குதலுக்குள்ளாகி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின்னரான மேற்படி வன்முறைச் சம்பவங்கள் பற்றி மாத்தளை பொலிஸில் செய்து கொள்ளப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மாத்தளை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply