கோத்தா, பசில் தொடர்பான அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் : மேர்வின்
பல்வேறுபடுகொலைகள் ஆட்கடத்தல்கள், வெள்ளை வேன் கலாசாரம் மற்றும் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச் செயல்களுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பல ஊழல்மோசடிகளில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் தொடர்பு உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.இவர்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தான் கொலை செய்யப்பட்டால் எதற்கும் அஞ்சப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்விடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற முக்கிய கொலைகளுக்கு இவர்கள் பொறுப்பு கூற வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து மேர்வின் சில்வா ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கியுள்ளேன்.
இது பழிவாங்கல் அல்ல. ஆனால், குறித்த இருவரும் என்னைப் பழிவாங்கினர். கடந்த காலங்களில் நடந்த முக்கிய கொலைகளுக்கு பாதுகாப்புத் துறையில் சக்திவாய்ந்தவராக விளங்கிய இவரே பொறுப்புக்கூற வேண்டும்.
இவற்றைச் சொல்வதால் சில நேரம் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். நான் இறந்தாலும் இறப்பது நரியைப் போன்றல்ல. சிங்கத்தைப் போன்றே இறப்பேன்.
எனக்கு சேவையாற்ற சரியான அமைச்சொன்றை வழங்கவில்லை. உண்மையைக் கூறுவதால் உயிர் போனாலும் பரவாயில்லை. எனக்கு எதிராக எப்படியான குற்றச்சாட்டையும் முன்வைக்கலாம்.
யுத்தத்தை வென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நல்லாட்சியைச் சரிவர செய்திருந்தால் மைத்திரிபால சிறிசேனா கட்சியிலிருந்து சென்றிருக்கமாட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அரசியலில் முதிர்ச்சியடைந்தவர்கள் என்பதால் நாட்டுக்கு நல்லாட்சியைக் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன். இதேவேளை, குறித்த அமைச்சர் திவிநெகும மூலம் 600 கோடி ரூபாவைக் கொள்ளையிட்டுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும், பாதுகாப்புத் துறையில் சக்திவாய்ந்தவராக விளங்கியவருக்கும் தொடர்புள்ளதாக நான் அறிவேன். மேலும் பாரத லக் ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் ராகம லொக்கு சீயா ஆகியோரின் கொலைகளுடனும் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன்.
இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த அனைத்துக் கொலைகளுடனும் அவருக்கு தொடர்புள்ளது. அவர் வெள்ளை வேன் கலாசாரத்தின் ஆசிரியர் என்றே நான் கருதுகிறேன். அவர் அறிந்தே இந்த அனைத்துக் கொலைகளும் நடந்தன. இதனை நான் பொறுப்புடன் கூறுகிறேன். நான் யாருக்கும் பயப்படவில்லை. தேவையென்றால் என் னைக் கொலை செய்வார்கள்.
இவை அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நன்கு அறிவார். கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு முன் னால் என்னால் தவறான வசனங்கள் கூறப்பட்டிருந்தன. உண்மையில் அதெல்லாம் நானாக நினைத்துக் கூறியதல்ல. எனது கோப சுபாவத்தால் கூறியது. அது தொடர்பாக நான் முழு ஊடகங்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் பெலியத்தையைச சேர்ந்தவன். சிறந்த சிங்கள பௌத்தன். என்னிடம் வைராக்கியம் கிடையாது. ஆனால் எனது சுபாவத்தை சீண்டிப் பார்த்தால் காயத்தைச் சந்திக்க நேரி டும். கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் பிரதானிகள் இருவர் என்னைச் சீண்டினர். இதனால் அவர்களுக்கு எதிராக முறையிட்டுள்ளேன். பல்வேறுபடுகொலைகள் ஆட்கடத்தல்கள், வெள்ளை வேன் கலாசாரம் மற்றும் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச் செயல்களுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பல ஊழல்மோசடிகளில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் தொடர்பு உள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தான் கொலை செய்யப்பட்டால் எதற்கும் அஞ்சப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்விடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர், கடந்த காலத்தில் இடம்பெற்ற முக்கிய கொலைகளுக்கு இவர்கள் பொறுப்பு கூற வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து மேர்வின் சில்வா ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கியுள்ளேன்.
இது பழிவாங்கல் அல்ல. ஆனால், குறித்த இருவரும் என்னைப் பழிவாங்கினர். கடந்த காலங்களில் நடந்த முக்கிய கொலைகளுக்கு பாதுகாப்புத் துறையில் சக்திவாய்ந்தவராக விளங்கிய இவரே பொறுப்புக்கூற வேண்டும்.
இவற்றைச் சொல்வதால் சில நேரம் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். நான் இறந்தாலும் இறப்பது நரியைப் போன்றல்ல. சிங்கத்தைப் போன்றே இறப்பேன்.
எனக்கு சேவையாற்ற சரியான அமைச்சொன்றை வழங்கவில்லை. உண்மையைக் கூறுவதால் உயிர் போனாலும் பரவாயில்லை. எனக்கு எதிராக எப்படியான குற்றச்சாட்டையும் முன்வைக்கலாம்.
யுத்தத்தை வென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நல்லாட்சியைச் சரிவர செய்திருந்தால் மைத்திரிபால சிறிசேனா கட்சியிலிருந்து சென்றிருக்கமாட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அரசியலில் முதிர்ச்சியடைந்தவர்கள் என்பதால் நாட்டுக்கு நல்லாட்சியைக் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன். இதேவேளை, குறித்த அமைச்சர் திவிநெகும மூலம் 600 கோடி ரூபாவைக் கொள்ளையிட்டுள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும், பாதுகாப்புத் துறையில் சக்திவாய்ந்தவராக விளங்கியவருக்கும் தொடர்புள்ளதாக நான் அறிவேன். மேலும் பாரத லக் ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் ராகம லொக்கு சீயா ஆகியோரின் கொலைகளுடனும் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன்.
இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த அனைத்துக் கொலைகளுடனும் அவருக்கு தொடர்புள்ளது. அவர் வெள்ளை வேன் கலாசாரத்தின் ஆசிரியர் என்றே நான் கருதுகிறேன். அவர் அறிந்தே இந்த அனைத்துக் கொலைகளும் நடந்தன. இதனை நான் பொறுப்புடன் கூறுகிறேன். நான் யாருக்கும் பயப்படவில்லை. தேவையென்றால் என் னைக் கொலை செய்வார்கள்.
இவை அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நன்கு அறிவார். கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு முன் னால் என்னால் தவறான வசனங்கள் கூறப்பட்டிருந்தன. உண்மையில் அதெல்லாம் நானாக நினைத்துக் கூறியதல்ல. எனது கோப சுபாவத்தால் கூறியது. அது தொடர்பாக நான் முழு ஊடகங்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கின்றேன்.
நான் பெலியத்தையைச சேர்ந்தவன். சிறந்த சிங்கள பௌத்தன். என்னிடம் வைராக்கியம் கிடையாது. ஆனால் எனது சுபாவத்தை சீண்டிப் பார்த்தால் காயத்தைச் சந்திக்க நேரி டும். கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் பிரதானிகள் இருவர் என்னைச் சீண்டினர். இதனால் அவர்களுக்கு எதிராக முறையிட்டுள்ளேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply