பாகிஸ்தானில் பிரெஞ்சு பத்திரிகைக்கு எதிராக தீவிரவாதி சயீத் போராட்டம்

சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டதால் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 12 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னரும் மீண்டும் அப்பத்திரிகையில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு பல நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தானில் இதற்கு போராட்டம் வலுத்துள்ளது. நேற்று லாகூர், கராச்சி, குவெட்டா, பெஷாவர், முல்தான் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கராச்சியில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.இப்பேரணியில் கிறிஸ்தவ பாதிரியார்களும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கராச்சியில் பாகிஸ்தான் தெக்ரிக்–இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் பேரணி நடத்தினார்.

பின்னர் அங்குள்ள பிரெஞ்சு தூதரகம் சென்று பிரச்சினைக்குரிய அந்த பிரெஞ்சு பத்திரிகையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

லாகூரில் ஜமாத்–உத்–தவா அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த தீவிரவாதியுமான ஹபீஸ் சயீத் பேரணி நடத்தினார். அதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய அனைவரும் பிரான்சுடன் ஆன உறவை பாகிஸ்தான் அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

குவெட்டாவில் நடந்த போராட்டத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிரான்ஸ் கொடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண் டேவின் உருவ பொம்மையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் 200 பேர் பங்கேற்றனர். அப்போது கார்டூனிஸ்ட் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply