100 நாள் வேலைத்திட்டத்திக்கு ஒத்துழைப்பு இல்லை : வாசுதேவ நாணயக்கார

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்கு எவ்­வி­த­மான ஒத்­து­ழைப்­பையும் வழங்கப் போவ­தில்லை என தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் ஜன­நா­யக இடது சாரி முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார பாரா­ளு­மன்­றத்தில் தனது கட்சி ஏனைய இடது சாரி கட்­சி­க­ளுடன் இணைந்து தனி­யான எதிர்த்­த­ரப்­பாக இயங்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். இது தொடர்­பாக வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. மேலும் தெரி­விக்­கையில் புதிய அர­சியல் கட்சி எத­னையும் நான் ஆரம்­பிக்­க­வில்லை. எமது கட்சி ஜன­நா­யக இடது சாரி முன்­ன­ணி­யாகும் அது தொடர்ந்து இயங்கும்.புதிய ஜனா­தி­ப­தியின் 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்­க­மாட்டோம்.ஏனென்றால் முத­லா­ளித்­துவ மேற்­கத்­தேய கொள்­கை­யு­டைய ஐ.தே.கட்­சி­யு­ட­னேயே ஜனா­தி­பதி உடன்­பாடு கொண்­டுள்ளார். எனவே இதற்கு ஒரு போதும் உடன்­பட முடி­யாது.

அதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில் எமது கட்சி, சம­ச­மாஜக் கட்சி, கம்­யூனிஸ் கட்சி, தேசிய சுதந்­திர முன்­னணி மற்றும் இடது சாரி கொள்­கை­களைக் கொண்ட கட்­சிகள் தனித்து சுயா­தீ­ன­மாக செயற்­படும். இது தொடர்­பாக சபா­நா­ய­க­ருக்கு எதிர்­வரும் நாட்­களில் அறி­விக்­க­வுள்ளோம்.

தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால பொறுப்­பேற்­றுள்ளார்.எனவே எதிர்­வரும் 3 மாதங்­க­ளுக்கு பின்னர் நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலின் போது தற்­போ­தைய ஐ.தே. கட்­சி­யு­ட­னான கூட்­ட­ர­சாங்­கத்தில் முரண்­பா­டுகள் தலை­தூக்கும்.

எதிர்க்­கட்சித் தலை­வ­ராக பொறுப்­பேற்­க­வுள்ள நிமால் சிறி­பால டி சில்வா ஜனா­தி­ப­தி­யுடன் உடன்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­வதை எதிர்க்­க­வில்லை. ஆனால் ஐ. தே. கட்­சி­யு­ட­னான உடன்­பாட்­டி­லி­ருந்து ஜனா­தி­பதி வெளியே வர வேண்டும்.அவ்வாறானதொரு நிலையிலேயே உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். அந்த சூழ்நிலையில் நாம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply