மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆர்வம்

இலங்­கையின் புதிய அர­சாங்கம் மேற்­கொண்­டு­வரும் நட­வ­டிக்­கை­களை பாராட்­டி­யுள்ள அமெ­ரிக்கா மைத்­தி­ரி­பால அர­சாங்­கத்­துடன் இணைந்து பணி­யாற்ற ஆர்­வ­மா­க­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்­காவின் தென்­னா­சியா மற்றும் மத்­திய ஆசி­யா­விற்­கான பிரதி இரா­ஜங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இதனை தெரி­வித்­துள்ளார். இலங்கை மக்கள் புதிய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எதனை எதிர்­பார்க்­கி­றார்­களோ அத­னையே நாங்­களும் எதிர்­பார்க்­கிறோம். இலங்கை மக்­க­ளுக்கு அது அளித்த தேர்தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்க விரும்­பு­கின்றோம் என அவர் குறிப்­பிட்­டுள்ளார்.புதிய அர­சாங்கம் ஆரம்ப நாட்­களில் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் குறித்து நாங்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்ளோம்,இலங்­கையில் ஜன­நா­யகம் தொடர்­பாக வழங்­கப்­பட்ட உறு­தி­யான தீர்ப்பை நாங்கள் வர­வேற்­கிறோம்,

ஆட்சி மாற்றம் அமை­தி­யான முறையில் இடம்­பெற்­றுள்­ளதும்,புதிய அர­சாங்கம் ஆட்­சிப் பொ­றுப்பை ஏற்று, தனது தேர்தல் பிர­சா­ரத்தின் போது அளிக்­கப்­பட்ட பல வாக்­கு­று­தி­களை நிறைவேற்றத்தொடங்கியுள்ளது, நாங்கள் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply