வங்கதேசத்தில் ஐ.எஸ். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கைது
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் உள்பட 4 பேரை வங்கதேச காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் ஐ.எஸ். மண்டல ஒருங்கிணைப்பாளர் ஷகாவதுல் கபீர் பல முறை இந்தியா வந்து சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தலைநகர் டாக்காவில் இந்த நால்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஐ.எஸ். அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையே” என்றார்.
அவர்களில் ஒருவர் ஐ.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஷகாவதுல் கபீர் என்பதும், உடன் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் முகமது அன்வர் ஹுசைன், முகமது ரபியுல்
இஸ்லாம், முகமது நஸ்ருல் ஆலம் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து மடிக்கணினிகளும், மதப் போரைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டன.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதை அந்த நால்வரும் ஒப்புக் கொண்டதாக புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் மஸூதூர் ரகுமான்
தெரிவித்தார்.
வங்கதேசத்தில் முக்கிய நபர்களை படுகொலை செய்து, ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதே இந்த நால்வரின் நோக்கம் என அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்த ஷகாவதுல் கபீரின் உறவினர் ஷமீம், பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும், அவரும் ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் எனவும்
புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் முகமது அபு ஜாஃபர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஷகாவதுல் கபீர் அடிக்கடி பயணம் செய்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்களால் உளவு அமைப்புகளின் கவனம் சிதறியுள்ள நிலையைப் பயன்படுத்தி, அங்கு மத பயங்கரவாதிகள் காலூன்ற
முயற்சிக்கலாம் என்று பலர் அச்சம் தெரிவித்து வந்த நிலையில், ஐ.எஸ். தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply