தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போது இல்லை : சம்பிக்க ரனவக்க
தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போது இல்லை. அமுலிலுள்ள தேர்தல் சட்டத்தின்படியே இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எரிபொருள் சக்தி வள அமைச்சர் பாட்லி சம்பிக்க ரனவக்க தெரிவித்தார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களுக்கு சமுகமளித்து மாநாயக்கர்களிடம் நல்லாசிகள் பெற்றுக்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
36 மெற்றிக்தொன் வெடிபொருட்களை இறக்குமதி செய்து நாட்டை அழித்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் முன்னைய அரசின் மடியில் தவழ்ந்து விளையாடினார். தற்போது அவர் ராஜபக்ஷக்களின் செல்லப்பிள்ளையாக காணப்படுகிறார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட சகலருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மேற்கொள்ளும்படி பொலிஸருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள தேர்தல் சட்டத்தின்படியே இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதற்குப் பின்னரே சட்டம் மாற்றப்பட்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.
எரிபொருள் இறக்குமதி மீதான அபரிமித வரிகள் நீக்கப்படும். இதனால் எரிபொருட்களின் விலை வீழ்ச்சி அடையும். இதன் பிரதி பலன் பொதுமக்களைச் சென்றடையும் வித்தில் விலை குறைப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரித்தானிய நிறுவனம் ஒன்று மன்னார் பிரதேசத்தில் எண்ணெய் ஆய்வுக்காக 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தியுள்ளது. இது ஒரு வீண் விரயமான விடயமாகும். இது பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply