கிழக்கு உக்ரைனில் மீண்டும் ராணுவம்– கிளர்ச்சியாளர்கள் சண்டை: 50 பேர் பலி
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தன்னாட்சி உரிமை கேட்டு ரஷிய ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு செப்டம்பரில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.கிழக்கு உக்ரைனில் டொனெஸ்ட்க் விமான நிலையம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை மீட்க உக்ரைன் ராணுவம் தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.அதனால் டொனெஸ்ட்க் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. ஆஸ்பத்திரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு சேதமடைந்துள்ளது. ராணுவம் குண்டு வீச்சு நடத்துவதாக கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதை ராணுவம் மறுத்துள்ளது.இந்த சண்டையின் காரணமாக இரு தரப்பிலும் இதுவரை 50–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஆயுத உதவி அளிப்பதாகவும், 8,500 ராணுவ வீரர்களை உதவிக்கு அனுப்பி இருப்பதாகவும், உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அவர்களை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.
இதை ரஷியா மறுத்துள்ளது. இதற்கிடையே டொனேஸ்ட்க் விமான நிலையத்தின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்டு விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே அங்கு சண்டை தீவிரமடைந்து வருவதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்–கி–மூன் கவலை தெரிவித்துள்ளார். உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஐ.நா. தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply