தேர்­தலின் பின்னர் நல்­லாட்­சியில் சந்­தேகம் எழுந்­துள்­ளது – அனுர பிரி­ய­தர்­சன யாப்பா

இத்­தனை காலமும் நாட்டில் அடக்கு முறை­களும் கொலை, கொள்ளை என்­பன கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. எனினும் ஆட்சிமாற்­றத்தின் பின்னர் அவை மீண்டும் தலைதூக்­கி­யுள்­ளன என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அனுர பிரி­ய­தர்­சன யாப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு கொழும்பில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்­சியின் பொதுச் செய­லாளர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
சில தினங்­க­ளுக்கு முன்னர் எமது பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் மீது அசிட் வீசப்­பட்­டுள்­ளது. வீடுகள் தாக்­கப்­பட்­டுள்­ளன. தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் சுமார் இரு நூற்­றுக்கும் அதி­க­மான தாக்­குதல் சம்­ப­வங்கள் எமக்­கெ­தி­ராக இடம்­பெற்­றுள்­ளது. ஆனால் இது­வரை சட்ட நட­வ­டிக்­கைகள் எவையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதித் தேர்தல் வரையில் சுயா­தீ­ன­மா ­கவே செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சர்­வ­தேச கண்­கா­ணிப்­புக்­களின் மத்­தியில் நல்­ல­தொரு தேர்தல் இடம்­பெற்­றது. எனினும் தேர்­தலின் பின்னர் நல்­லாட்­சியில் சந்­தேகம் எழுந்­துள்­ளது.

ஜனா­தி­பதி எமது கட்­சியின் தலைவர். அவர் எமக்கு பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­கின்றார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சுயா­தீன விசா­ர­ணை­யொன்­றிற்கு இட­ம­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். ஆனால் அடி மட்­டத்­திலும் அமைச்சுப் பத­வி­களில் இருக்கும் உறுப்­பி­னர்­களின் அடா­வடித் தன­மான செயற்­பா­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

தலை­மைத்­து­வத்தின் மீது நாம் குற்றம் சொல்­ல­வில்லை. ஆனால் ஒரு சிலரின் செயற்­பா­டுகள் மோச­மா­கி­விட்­டன. புதிய அர­சிடம் நாம் கேட்­டுக்­கொள்­வது நாட்டில் நல்­லாட்­சி­யினை செயற்­ப­டுத்த வேண்டும் என்­பதே எனவும் அவர் தெரி­வித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply