பாதிக்கப்பட்டோருக்கு பசில், ரிஷாத், டலஸ் நேரில் சென்று ஆறுதல்
அக்குரஸ்ஸ, கொடபிட்டிய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கவும் காயமடைந்தவர்களை பார்வையிடவுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் டலஸ் அழகபெரும, அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று சென்றிருந்தனர். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் உப தலைவர் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், டலஸ் அழகபெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோர் மாத்தறை பெரியாஸ்பத்திரிக்கும் சென்று காயமடைந்தவர்களுக்கான முதற்கட்ட நஷ்டஈட்டுத் தொகையையும் வழங்கினர்.
குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஏனையோரையும் அமைச்சர்கள் பார்வையிட்டதுடன் அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக ஆஸ்பத்திரி பணிப்பாளர்களுடனும் பேசினர்.
அதேவேளை நேற்றுக் காலை அக்குரஸ்ஸ பிரதேச சபையின் உபதலைவர் உபாலி சரத்சந்திர, கம்புறுபிட்டிய பிரதேச சபையின் உபதலைவர் திலக் தம்மிக விஜயசேகர, தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் லின்டன் அபேவீர ஆகியோர் மரண வீடுகளுக்கு போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சென்று தமது அநுதாபங்களைத் தெரிவித்தனர்.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயப்பட்டோருக்கு 10,000 ரூபாயும் மரணித்த குடும்பம் ஒன்றுக்கு தலா 50,000 ரூபாவையும் வழங்குவதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் குழுவொன்று செயலாற்றுவதாகவும் தெரிய வருகிறது.
அக்குரஸ்ஸ, பிடபெத்தர, மொறலக்க, தெனியாய, மாத்தறை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தெனியாய பகுதி தோட்டங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத் திட்டம் ஒன்றினையும் மேற்கொண்டு உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply