கத்தோலிக்க ஆயர்கள் குழு நேற்று நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம்
இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி வியானிபெர்னாண்டோ, ஆண்டகை மற்றும் மன்னார் ஆயர் அதி. வண இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் உட்பட கத்தோலிக்க ஆயர்கள் குழுவொன்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு நேற்று விஜயம் செய்தது. மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம், காமினி வித்தியாலயம், நெலுக்குளம், செட்டிக்குளம், பம்பைமடு போன்ற பகுதிகளுக்கு ஆயர்கள் குழு விஜயம் செய்தது.
நேற்றுக்காலை 9.30 மணிக்கு வவுனியாவுக்குள் சென்ற மேற்படி குழுவினர் மாலை 3.00 மணிவரை நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டதுடன் மோதல்களினால் காயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர். வவுனியா சென்ற ஆயர் குழுவினருடன் சென்றிருந்த கரிதாஸ் நிறுவன மக்கள் தொடர்பு மற்றும் ஊடக ஆலோசகர் எஸ்.பி. அந்தோணிமுத்து தகவல் தருகையில், கத்தோலிக்க ஆயர்கள் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள சில நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்திருந்தனர். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அவதானிக்கும் பொருட்டு விஜயம் செய்தனர்.
இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி வியாணி பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயரும், கரிதாஸ் இலங்கை செடெக் தலைவருமான அதி வணக்கத்துக்குரிய ஹெரல்ட் எண்டனி பெரேரா, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி நோபட் அந்ராகி, இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கிடஸ் சீ பெரேரா, சிலாபம் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய வெலன்ஸ் மெண்டிஸ், கரிதாஸ் செடெக் நிறுவன தேசிய இயக்குநர் அதி வணக்கத்துக்குரிய டேமியன் பெர்னாண்டோ, மன்னார் கரிதாஸ் வாழ்வோதய இயக்குநர் வண பிதா பெபி சூசை ஆகியோர் இந்த விஜயத்தின்போது கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply