வீண்செலவுகளை தவிர்க்கும் வகையில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் : பாராளுமன்ற மைதானத்தில் 2500 விசேட பிரமுகர்களுக்கு அழைப்பு
இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 67 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இம்முறை 67 ஆவது சுதந்திர தேசிய வைபவம் இலங்கையின் நிருவாக தலைநகரமான ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந் துள்ள பாராளுமன்ற மைதானத்தில் மிக எளிமையாக இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்துறை அமைச்சு பூரணப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை பொதுமக்கள் ஒழுங்குகள் அமைச்சு பூரணப்படுத்தியுள்ளது. ‘ அற்புதமான நாடு – ஒளிமயமான நாளை ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் முப்படைகள் மற்றும் பொலிஸாரின் விஷேட அணிவகுப்பு மரியாதையும் நடனக் கலைஞர்களின் விஷேட கலாசர நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. எனினும் இம்முறை வீண் செலவுகள் தவிர்க்கப்பட்டு சுதந்திர தின வைபவம் மிக எளிமையாக கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இம்முறை வான் சாகசங்கள்இ கடல்மார்க்கமான சாகசங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஜனாதி மைத்திரிபால சிறிசேன இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளின் போது வீண் செலவுகளை குறைப்பதற்கான அனைத்து ஆலோசனைகளையும் உள்துறை அமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் அதன்படி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் அனைத்து சுதந்திரதின அணிவகுப்பு மரியாதைகளின் போதும் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை மற்றும் மீன் பிடி அமைச்சின் செயலாளர் எஸ்.டீ.ஏ.பொரலெஸ்ஸ குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொள்ள சுமார் 2500 விஷேட பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனைவிட இந்த சுதந்திரதின நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் கணிப்பின் பிரகாரம் 15000 பொதுமக்கள் பார்வையாளர்களக இருப்பர் என அறியமுடிகின்றது.
இந் நிலையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான இறுதி ஒத்திகை நிகழ்வுகள் நேற்று காலை நடைபெற்றன. அதன்படி இன்று இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வுகளில் முப்படைகள் மற்றும் பொலிஸ் படையையினரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் 5922 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். இதனைவிட குதிரைப்படைஇ யானைப்படைகளின் அணிவகுப்புக்களும் இங்கு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அணிவகுப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 600 பேர் கொண்ட நடனக் கலைஞர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இன்று காலை 6.30 மணி முதல் சுதந்திர தின நிக்ழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சின் தகவல்களின் படிஇ காலை 6.30 மணிக்கு சமயக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. பிரதானமாக மருதானை மஹா பிரிவனா விகாரையிலும்இ கொழும்பு 13 ஸ்ரீ பொன்னம்பலனேஸ்வர ஆலயம்இ மருதானை ஜும் ஆ பள்ளிவாசல்இ பொரளை கத்தோலிக்க சகல புனிதர்களின் ஆலயம்இ வெள்ளவத்தை தென் இந்திய கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றில் இந்த சமய கிரியைகள் இடம்பெறவுள்ளன.
இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு டீ.எஸ்.சேனநாயக்கவின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனை தொடர்ந்தே ஏனைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் இன்றைய சுதந்திர தினத்தில் சுதந்திர தின பிரகடனமானது மும்மொழிகளிலும் வாசிக்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாகவும் இலங்கையில் கடந்த காலங்களில் பதிவான இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தற்போது இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இவ்வாறு மும்மொழிகளிலும் இந்த பிரகடனம் செய்யப்படவுள்ளது. இதனூடாகவே அற்புதமான நாடு ஒளிமயமான நாளை என்ற தொனிப்பொருளின் கீழ் சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்குகளை பராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அதன்படி பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் அனைத்து பாதைகளும் இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரையிலான ஐந்து மணி நேரத்துக்கு முற்றாக மூடப்படவுள்ளன. அதன்படி பல்வேறு பிரதேசங்களாக பாராளுமன்ற வளாகத்துக்கு செல்லத்தக்க ஐந்து பிரதான வீதிகளும் இன்று ஐந்து மணி நேரத்துக்கு போக்குவரத்து தொடர்பில் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அதனால் சாரதிகள் மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரியிடம் குறிப்பிட்டார்.
அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பொலிஸ் தலைமையகம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி 3000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான சுதந்திர தின வைபவம் தொடர்பிலான பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தகவல் தருகையில்,
சுதந்திரதின வைபவங்கள் இம்முறை பாராளுமன்ற மைதானப் பகுதியில் இடம்பெறும் நிலையில் கிம்புலாவெல சந்தி முதல்இ கியத்ஹேம் சுற்று வட்டம் வரையிலான ஜப்பான் நட்புறவு வீதிஇ பொல்துவ சந்தி முதல் பாராளுமன்றம் நோக்கிய பாராளுமன்ற வீதிஇ எச்.என்.பீ. சுற்றுவட்டம் முதல் கியத்ஹேம் சுற்றுவட்டம்இ டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தைஇ பெலவத்தை சந்தி முதல் கியத்ஹேம் சுற்றுவட்டம் வரையிலான பெலவத்தை வீதிஇ பாராளுமன்ற மைதானம் முன் உள்ள வீதி ஆகிய ஐந்துமே முற்றாக மூடப்படும். இது காலை 6.00 மணி முதல் மு.ப. 11 மணிவரை அமுலில் இருக்கும். இந்த காலப்பகுதியில் வாகன சாரதிகள் அந்த வீதிகளை தவிர்த்து மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதனை விட குறித்த ஐந்து மணி நேர காலப்பகுதிக்குள் 171இ163 இலக்கங்களைக் கொண்ட பஸ் வண்டிகள் நிறுத்தப்படும் இடமானது பத்தரமுல்லையிலிருந்து மாலபேவிற்கு மாற்றப்படுகின்றது. இந்த போக்கு வரத்து நிலைமைகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் செயற்படவும். என்றார்.
இதேவேளை இன்றைய சுதந்திர தின நிக்ழ்வை முன்னிட்டு மூன்று பிரிவுகளை சேர்ந்த சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து கைதிகளினதும் சிறைத்தண்டனைக் காலம் ஒருவாரத்தால் குறைக்கப்படவுள்ளன. இதனைவிட தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் அனைத்து கைதிகளும்இ 75 வயதுக்கு மேற்பட்ட பாரதூரமான குற்றங்களில் ஈடுபடாத கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச் சாலை ஆணையாளர் அலுவலக தகவல்கள் குரிப்பிட்டன.
எவ்வாஅறாயினும் கொலைஇ சிறுவர் துஷ்பிரயோகம்இ பாலியல் பலாத்காரம்இ இலஞ்ச ஊழல் உள்ளிட்ட 24 குற்றங்கள் தொடர்பில் இந்தன் போது கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்படமாட்டாது என அறியமுடிகின்றது.
சுமர் 450 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இருந்த இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் நான்காம் திகதியை தேசிய சுதந்திர தினமாக இலங்கை மக்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply