அரியநேத்திரன் எம்.பியிடம் ரூ.50 மில். நஷ்டஈடு கோரி கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரனிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சட்டத்தரணி யினூடாக கோரிக்கை கடிதம் அனுப்பி யுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. நேற்று பாராளும ன்றத்தில் தெரிவித்தார். சிறப்புரிமை மீறல் பிரச்சினை யொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், எமது அரசாங்கத்துடன் இணைந்தால் 50 கோடி ரூபா தருவதாக நான் கூறிய தாக, அரியநேத் திரன் எம்.பி. ஊடகங் களுக்கு தெரிவித்துள் ளார்.

இவருடன் நான் ஒருபோதும் பேசியது கிடையாது. ஆனால் பாராளுமன்றத்தில் நேரில் கண்ட போது சிரித்திருக்கிறேன். எனக் கெதிராக பொய்க் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. என்னை கைது செய்வதற்காகவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அண்மையில் திஸ்ஸ அத்தநாய க்கவையும் இவ்வாறு கைது செய்தனர்.

ஒரு வருடத்துக்கு முன்னர் தாம் கண்ட கனவைத் தான் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றார். இதனை சபாநாயகரின் கவனத்திற் கொண்டு வருவதாக குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply