நிவாரணங்களுக்கு போதுமான நிதி புதிய பட்ஜட்டில் ஒதுக்கப்படவில்லை : எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்தே இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது. இவற்றில் குறிப் பிடப்பட்டுள்ள நிவாரணங்களு க்காக போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதை நாம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்க் கட்சி ஆதரவு வழங்கும் எனவும் கூறினார். இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், மக்களுக்கும் அரசாங்க ஊழியர்க ளுக்கும் நிவாரணம் கிடைப்பதை நாம் எதிர்க்கவில்லை.
அதனை வரவேற்கிறோம். ஆனால் எதிர்க் கட்சியின் அனுமதியின்றி இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. எமது ஆதரவின் மூலமே இந்த நிவாரணங்கள் மக்களை சென்றடையும். எந்த திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்கினாலும் விமர்சன ரீதியான ஆதரவையே வழங்குவோம்.
இதிலுள்ள விடயங்கள் எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்ற பிரச்சினை காணப்படுகிறது நிவாரணம் வழங்குவதற்கு ஒதுக்கிய பணம் போதுமானதா என்ற சிக்கல்கள் காணப்படுகின்றன. வருடாந்தம் எமது நாட்டில் 3 இலட்சத்து 60 ஆயிரம் முதல் 4 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வருடாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்க ரூபா 8 கோடி தேவை ஆனால் ஒரு கோடி ரூபாவே இதற்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. கெசினோ சூதாட்டத்தை முற்றாக நிறுத்துவதாக கூறினாலும் கெசினோவுக்கு விசேட வரி இடப்பட்டு ள்ளது. இதனூடாக கெசினோவுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது.
கெசினோ சூதாட்டம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை என்ன என்பதை வெளியிட வேண்டும். மதுபான உற்பத்திக்கு பாரிய வரி அறவிட முடிவு செய்யப்பட்டதினூடாக சிறிய மதுசார உற்பத்திகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாரிய உற்பத்தியாளர்களின் ஏகபோக உரிமைக்கு இடமளிக்கப்பட்டு ள்ளது. மாளிகை வரி தொடர்பில் தெளிவான முறைமை முன்வைக்கப்பட வில்லை.
நெல் கொள்வனவிற்கான உத்தரவாத விலை 50 ரூபாவாக உயர்த்தப்பட்டாலும் இதற்கான முறைமை எதுவும் தயாரிக்கப்பட்டுள்ளதா? கோதுமை விலை குறைக்கப்பட்டதால் உள்நாட்டு விவசாயம் பாதிக்கப்படும். கடந்த காலத்தில் அரிசி பாவனை அதிகரித்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply