ஜனாதிபதி செயலக வாகனங்கள் குறித்து சரியாக தகவல்கள் இதுவரை இல்லை : பிரதமர்
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் குறித்து சரியான விபரங்கள் எதுவும் இல்லை. எனவே. இது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஜே.வி.பி எம்.பி அநுரகுமார திசாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறியிருந்தார். ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான எத்தனை வாகனங்கள் காணாமல் போயுள்ளன. அவை தற்போது எங்கே உள்ளன என்பது தொடர்பில் எந்தவொரு ஆவணமும் கிடையாது. ஆங்காங்கே வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் முழுமையான விபரங்கள் எவருக்கும் தெரியாதுள்ளன. வாகன இறக்குமதி நிறுவனங்கள் மூலமாகவாவது இதன் விபரங்களைப் பெறமுடியுமா என ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அநுரகுமார திசாநாயக்க தனது கேள்வி யின் போது, ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் பல பிரதேங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.
அண்மையில் பிட்டகோட்டே பகுதியிலி ருந்து 22 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளன.
நாட்டு மக்கள் மீது பாரிய வரிச்சுமையை மேற்கொண்டு பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்கள் தற்பொழுது ஆங்காங்கே துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன. இவை கோடிக்கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்தவை.
இவற்றை யார் உபயோகித்தார்கள்? ஏன் இவை மீள முறைப்படி கையளிக்கப் படவில்லை. இவை ஏன் ஆங்காங்கே கைவிடப்பட்டுள்ளன என்பதற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தால் உபயோகிக்கப்பட்ட வாகனங்கள் எத்தனை என்பதை முழுமையாக கூற முடியாமல் உள்ளது. இது தொடர்பில் ஆராயுமாறு நான் ஜனாதிபதி செயலகத்தைப் பணித்துள்ளேன்.
வாகனங்கள் எத்தனை, அவை எங்குள்ளன என்பது தொடர்பான தகவல்கள் கிடைத்ததும் நான் சபையில் அவற்றை வெளிப்படுத் துவேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply