சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றமையை அர்த்தமற்ற வகையில விமர்சிக்கக் கூடாது

சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யா­கவும் ராஜ­தந்­திர அர­சியல் வல்­லு­ன­ரா­கவும் விளங்கும் இரா. சம்­பந்தன் சுதந்­திர தின வைப­வத்தில் கலந்து கொண்­டதை அர்த்­த­மற்ற முறையில் விமர்­சிப்­பதை தமிழ் தலை­வர்கள் தவித்­துக்­கொள்ள வேண்டும் என்று மூதூர் சிவில் அமைப்­பினரும் திரு­மலை மாவட்ட சமூக அமைப்­பினரும் கூட்­டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மூதூர் சிவில் அமைப்பின் தலை­வரும் சமூக சேவை­யா­ள­ரு­மான கந்­தையா நடே­ச­பிள்ளை கையெ­ழுத்­திட்டு வெளி­யிட்டுள்ள அறிக்­கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட் டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் 67வது சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டது தொடர்­பான அதி­ருப்­தியை இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மூத்த துணைத்­த­லைவர் பேரா­சி­ரியர் சிற்­றம்­பலம் வெளி­யிட்­டுள்ளார். அவர் கட்­சியின் மத்­திய குழு உட­ன­டி­யாக கூட்­டப்­பட்டு சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டமை தொடர்பில் விவா­திக்க வேண்­டு­மென ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் கூட்டு பொறுப்பை மீறி சிற்­றம்­பலம் கருத்து தெரி­வித்­தி­ருப்­பது அர­சியல் நாக­ரீ­க­மற்ற செய­லாகும். புதிய அரசின் 100நாள் வேலைத்­திட்­டத்தில் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து ஏதும் தெரி­விக்­கப்­ப­டாத சூழலில் இவ்­வி­ரு­வரும் சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டது தவறு என சிற்­றம்­பலம் கூறி­யி­ருக்கும் விமர்­ச­ன­மா­னது அர்த்­த­மற்­றதும் அர­சியல் பாடம் புரி­யாத செய்­தி­யு­மாகும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனை பொறுத்­த­வரை தீர்க்­க­மான ஞானமும் சாணக்­கி­யமும் நிறைந்த ஒருவர் என்­பதை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அவ­ரது தீர்­மா­னங்­களும் முடி­வு­களும் பிரித்­தா­னிய யாப்பில் கூறப்­பட்­டது போல் மன்னன் தவறு செய்­வ­தில்­லை­யென்­ப­தற்கு ஒத்­த­தாகும்.

புதிய ஆட்சி மாற்­றத்தின் மூல கர்த்­தா­வாக விளங்­கி­யவர் சம்­பந்தன். அவர் மீது வடக்கு, கிழக்கு மக்கள் கொண்­டி­ருக்­கின்ற கன­தி­யான நம்­பிக்­கைகள் எப்­போதும் வீண்­போக முடி­யாது. ஆட்சி மாற்­றத்­திற்­காக தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க சொன்­ன­போது காட்­டாத எதிர்ப்பை சிற்­றம்­பலம் போன்ற சிலர் ஏன் இப்போது காட்ட முற்­ப­டு­கின்­றார்கள். என்­பது புரி­யாத விட­ய­மா­க­வே­யுள்­ளது. விடு­தலை போராட்ட காலத்­திலும் இத்­த­கைய அர்த்­த­மற்ற விமர்­ச­னங்­க­ளா­லேயே எல்­லா­வற்­றையும் இழந்து நடுத்­தெ­ரு­வுக்கு வந்தோம். பாரா­ளு­மன்ற நடை­மு­றை­க­ளையும் அர­சி­யல்­யாப்பு சத்­தி­யங்­க­ளையும் பின்­பற்றும் நாம் ஏன் சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொள்ள கூடாது என்ற விடயம் புரி­யாத புதி­ரா­க­வே­யுள்­ளது.

66 வருட அர­சியல் போக்கில் எதிர்ப்பு அர­சி­யல்பால் கொண்ட நம்­பிக்­கைகள் எமக்கு எந்த பய­னையும் தேடித்­த­ர­வில்லை. அமைச்­சுப்­ப­த­வி­க­ளுக்கோ அதி­கா­ரங்­க­ளுக்கோ சம்பந்தன் ஆசைப்பட்டவர் கிடையாது. அவர் எச்சந்தர்ப்பத்திலும் தமிழினத்தை காட்டிக்கொடுத்த புல்லுருவியும் அல்ல. தமிழ் மக்களின் நீடித்த நிலையான தீர்வுக்காக தியாகங்களை புரிந்து வரும் சம்பந்தனை கொச்சைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply